இருபடிச் சார்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணிதத்தில், இருபடிச் சார்பு என்பது இருபடி பல்லுறுப்புக்கோவையால் வரையறுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவைச் சார்பாகும்.
எடுத்துக்காட்டாக, ஒற்றை மாறி இருபடிச் சார்பு:
இதில் x ஒரு மாறி. இதின் வரைபடம் ஒரு பரவளையமாகும், இவ்வரைபடம் y அச்சுக்கு இணையான சமச்சீர் அச்சைக் கொண்ட ஒரு வளையமுமாகும்.
ஒற்றை மாறி இருபடிச் சார்பு சுழியத்துடன் சமன்படுத்தப்பட்டால், அது இருபடிச் சமன்பாடாகும். இச்சமன்பாட்டின் இரு தீர்வுகள் தொடர்புடைய இருபடிச் சார்பின் சுழியங்களாகும்.
இருவேறு மாறிகளைக் கொண்ட இருபடிச் சார்புக்கு எடுத்துக்காட்டாக, x மற்றும் y மாறிகளின் அடிப்படையில்:
இதில், a, b, c ஆகிய மூன்று மாறிலிகளில் குறைந்தபட்சம் ஒரு மாறிலி சுழியத்திற்குச் சமனற்றதாக இருத்தல் வேண்டும்.
மற்றும், x, y, z ஆகிய மூன்று மாறிகளில் x2, y2, z2, xy, xz, yz, x, y, z, ஆகியவற்றைக் கொண்ட பின்வரும் இருபடிச் சார்பில்,
a, b, c, d, e, f ஆகிய மாறிலிகளில் குறைந்தபட்சம் ஒன்றேனும் சுழியத்திற்குச் சமனற்றதாக இருத்தல் வேண்டும்.
ஆக, இருபடிச் சார்பு பல மாறிகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், சார்பை வரையறுக்கும் பல்லுறுப்புக்கோவையிலுள்ள இருபடி உறுப்புகளின் கெழுக்களில் (குணகங்களில்) ஒன்றேனும் சுழியத்திற்குச் சமனற்றதாக இருத்தல் வேண்டும்.