இருபுளோரின் அணைவு
வேதிச் சேர்மம்
இருபுளோரின் அணைவு (Difluorine complex) என்பது ஓர் இருபுளோரின் மூலக்கூறும் (F2) வேறு மற்றொரு மூலக்கூறும் சேர்ந்து உருவாகும் ஓர் அணைவுச் சேர்மமாகும். தங்கம் எப்டாபுளோரைடு (AuF7) இதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.[1] தங்கம் (VII) சேர்மமாக இருப்பதற்குப் பதிலாக, AuF7 என்பது தங்க பெண்டாபுளோரைடும் (AuF5) புளோரினும் (F2) சேர்ந்து உருவாகும் சேர்மமாக உள்ளது. இந்த முடிவு கணக்கீட்டு வேதியியல் ஆய்வுகளால் மீண்டும் மீண்டும் ஆதரிக்கப்படுகிறது. η2-H2 ஈந்தணைவியைக் கொண்டிருக்கும் ஈரைதரசன் அணைவுகளைப் போலல்லாமல் இருபுளோரின் அணைவு இருபுளோரின் அணைவு η1-F2 ஈந்தணைவியைக் கொண்டிருக்கும். அதாவது முறையே முதலாவது ஈந்தணைவி அடுத்ததை தொடாமலும் இரண்டாவது ஈந்தணைவி அடுத்ததை தொட்டுக் கொண்டும் இருக்கும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Timakov, A. A.; Prusakov, V. N.; Drobyshevskii, Y. V. (1986). "Gold Heptafluoride" (in Russian). Doklady Akademii Nauk SSSR 291: 125–128.
- ↑ Conradie, Jeanet; Ghosh, Abhik (2019). "Theoretical Search for the Highest Valence States of the Coinage Metals: Roentgenium Heptafluoride May Exist". Inorganic Chemistry 58 (13): 8735–8738. doi:10.1021/acs.inorgchem.9b01139. பப்மெட்:31203606.