தங்கம் எப்டாபுளோரைடு
வேதிச் சேர்மம்
தங்கம் எப்டாபுளோரைடு (Gold heptafluoride) என்பது AuF7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம் எழுபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு[1] தொகுப்புமுறையில் தயாரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. முதலாவது இருபுளோரின் அணைவுச் சேர்மமாக (AuF5•F2) இது இருக்கலாம் என்று நடைமுறைக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. தங்கம்(VII) புளோரைடு சேர்மத்தை விட தங்கம் (V) இருபுளோரின் அணைவுச்சேர்மம் 205 கிலோயூல்/மோல் அளவுக்கு அதிகமாக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. 734 செ.மீ-−1 அளவிளான அதிர்வு அலைவெண் முடிவு இந்த அணைவு மூலக்கூறின் அடையாளக் குறியீடு ஆகும். [2]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபுளோரின்கோல்டு(V) புளோரைடு
| |||
வேறு பெயர்கள்
கோல்டு எப்டாபுளோரைடு
| |||
பண்புகள் | |||
AuF7 | |||
வாய்ப்பாட்டு எடை | 322.956 கி/மோல் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு , அரிக்கும் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | ReF7, IF7 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Timakov, A. A.; Prusakov, V. N.; Drobyshevskii, Y. V. (1986). (in Russian)Dokl. Akad. Nauk SSSR 291: 125–128.
- ↑ Himmel, Daniel; Riedel, Sebastian (2007-05-31). "After 20 Years, Theoretical Evidence That "AuF7" Is Actually AuF5•F2". Inorganic Chemistry 46 (13): 5338–5342. doi:10.1021/ic700431s.