இருமை குறிவிலக்கி

எண்முறை மின்னணுவியலில், இருமை குறிவிலக்கி அல்லது எண்முறை குறிவிலக்கி (Binary decoder) என்பது ஓர் இருமை முழுமை எண் பெறுமானத்தை வெளியீட்டு துண்டுகளின் வடிவங்களாக மாற்றும் சேருகை ஏரணச் சுற்று ஆகும். இவை பரவலாக நினைவாற்றல் அடையாள குறிவிலக்கி உட்பட்ட பல செயலிகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

எண்முறை மின்னணுவியலில் ஒரு இருமை குறிவிலக்கி பல உள்ளீட்டு, பல வெளியீட்டு தருக்கச் சுற்றின் வடிவத்தை எடுக்க முடியும். அது குறியீட்டு உள்ளீடுகளை குறியீட்டு வெளியீடுகளாக மாற்றும். அங்கு உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு குறிகள் மாறுபட்டவையாக இருக்கும். எ.கா. எண்முறை மின்னணுவியல் பதின்ம குறிவிலக்கிகள் n-to-2n ஆகும்.

எடுத்துக்காட்டு: ஒரு 2-to-4 வரிசை ஒற்றை இருமக் குறிவிலக்கி

ஓரளவு மிகவும் சிக்கலாக இருக்கும் இருமை குறிவிலக்கி n-to-2n வகை இரும குறிவிலக்கிகளாக இருக்கும். இந்த வகை குறிவிலக்கிகள் இணைப்புச் சுற்றுகளாக இருக்கின்றன. அவை 'n' குறியீட்டு உள்ளீடுகளில் இருந்து எண்முறை தகவலை அதிகபட்சமாக 2n ஆக தனித்த வெளியீடுகளுக்கு மாற்றப்படுகிறது. நாம் அதை அதிகபட்ச 2n வெளியீடுகள் என்று கூறுகிறோம். ஏனெனில் 'n' இரும குறியீட்டுத் தகவல் பயன்படுத்தப்படாத இரும இணைப்புகளில் இருந்தால் குறிவிலக்கி 2n என்பதற்குக் குறைவான வெளியீடுகளைக் கொண்டிருக்கலாம். நாம் 2-to-4 குறிவிலக்கி, 3-to-8 குறிவிலக்கி அல்லது 4-to-16 குறிவிலக்கி ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியும். நாம் இரண்டு 2-to-4 குறிவிலக்கிகளில் இருந்து 3-to-8 குறிவிலக்கியை வடிவமைக்க முடியும்.

அதே போல நாம் இரண்டு 3-to-8 குறிவிலக்கிகளை இணைப்பதன் மூலமாக 4-to-16 குறிவிலக்கியையும் வடிவமைக்க முடியும். இந்த வகை சுற்று வடிவமைப்பில் இரண்டு 3-to-8 குறிவிலக்கிகளின் செயல்படுத்தப்பட்ட உள்ளீடுகளும் 4வது உள்ளீட்டில் இருந்து தொடங்குகிறது. அது அந்த இரண்டு 3-to-8 குறிவிலக்கிகளுக்கு இடையில் தெரிவு செய்யும் ஒன்றாகச் செயல்படுகிறது. இது 4வது உள்ளீட்டை உச்சியில் அல்லது கீழ்ப்பகுதி குறிவிலக்கி செயல்படுத்துவதற்கு அனுமதிக்கிறது. அது முதல் குறிவிலக்கியில் D(0) இலிருந்து D(7) வரையிலான வெளியீடுகளையும் இரண்டாவது குறிவிலக்கியில் D(8) இல் இருந்து D(15) வரையிலான வெளியீடுகளையும் உருவாக்குகிறது.

உசாத்துணை

தொகு
  1. "Binary Decoder". பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமை_குறிவிலக்கி&oldid=1887984" இலிருந்து மீள்விக்கப்பட்டது