இரும்பல் காஞ்சி

இரும்பல் காஞ்சி என்னும் நூல் முழுமையானதாகக் கிடைக்கவில்லை.
இந்த நூலின் பெயரைச் சொல்லும் குறிப்புகளை இரண்டு உரைநூல்கள் தருகின்றன.
இந்த இரண்டு உரைநூல்களும் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியவை.
இந்த உரைகளில் இந்த நூலின் 5 பாடல்கள் தரப்பட்டுள்ளன.

பாடல் 1 தொகு

எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை
மையறு கேள்வி கேளாதோர்க்கே [1]
  • பாடலின் செய்தி
    • நற்சொல் கேளாத செவியிலுள்ள துளை அம்பு பாய்ந்த காயம்

பாடல் 2 தொகு

பகுதிக் கருவின் முட்டைக்
கதிர் விடும் பெருங்குறை வாங்கி வலங்கையிற்
பூ முதல் இருந்த நான்முகத் தனிச்சுடர்
வேதம் பாடி மேதகப் படைத்தன
எண் பெரு வேழம் [2]
  • பாடலின் செய்தி
    • அண்டத்தின் முட்டை செங்கதிர் மலர் (ஞாயிறு). இதில் அமர்ந்துகொண்டு நான்முகன் வேதம் பாடினான். அத்துடன் 8 திசைகளுக்கும் 8 யானைகளைப் படைத்தான்.

பாடல் 3 தொகு

நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறி
காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் – கோல
மயில்தோகை மேல்தோன்றி மாக்கடல்சூர் வென்றோன்
அணிச்சே வடிஎன் அரண். [3]
  • பாடலின் செய்தி
    • கடல் என்னும் தோகைமயில் மேல் கதிரவன் போலத் தோன்றி, சூரபனமாவை வென்ற முருகள் சேவடி எனக்கு அரண் (காப்பு)

பாடல் 4 தொகு

ஆர்கலி ஞாலத்(து) அறங்காவ லாற்சிறந்த
பேரருளி னார்க்குப் பெறலருமை யாதுளதோ
வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும்
போர்மலைந்து வெல்லும் புகழ் [4]
  • பாடலின் செய்தி
    • அறங்காவலினால் சிறந்த மன்னனுக்கு கடலலை போல வரும் படையையும் வெல்லுதல் எளிது.

பாடல் 5 தொகு

கருங்கலி முந்நீரின் மூழ்காத முன்னம்
இருங்கடி மண்மகளை ஏந்தினவே ஆயின்
பெரும்பெயர் ஏனத்(து) எயி(று) அனைய அன்றே
கரும்பறை தொண்டையான் தோள் [5]
  • பாடலின் செய்தி
    • கடலில் மிதந்துவந்த தொண்டைமானின் தோள்கள் பகைவரைத் தாக்கும்போது யானையின் கொம்புகளைப் போன்றவை.

காலம் தொகு

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு தொகு

  1. தக்கயாகப் பரணி தாழிசை 189 உரை
  2. தக்கயாகப் பரணி தாழிசை 276 உரை
  3. புறத்திரட்டு பாடல் எண் 5 கடவுள் வாழ்த்து
  4. புறத்திரட்டு பாடல் எண் 60 (அதிகாரம் வலி அறிதல்)
  5. புறத்திறட்டு பாடல் எண் 1475 (அதிகாரம் புகழ்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பல்_காஞ்சி&oldid=3176390" இலிருந்து மீள்விக்கப்பட்டது