இரும்பு(III) பைரோபாசுபேட்டு

வேதிச் சேர்மம்

இரும்பு(III) பைரோபாசுபேட்டு (Iron(III) pyrophosphate) என்பது Fe4(P2O7)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

இரும்பு(III) பைரோபாசுபேட்டு
Iron(III) pyrophosphate
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெரிக் பைரோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
10058-44-3 (நோனா நீரேற்று)
பண்புகள்
Fe4(P2O7)3
வாய்ப்பாட்டு எடை 745.224 (நீரிலி)
907.348 (nonahydrate)
தோற்றம் மஞ்சள் திண்மம் (நோனா நீரேற்று)[1]
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

இரும்பு(III) மெட்டாபாசுபேட்டையும் இரும்பு(III) பாசுபேட்டையும் 1:3 என்ற விகிதவியல் அளவுகளில் ஆக்சிசன் முன்னிலையில் சூடுபடுத்தும் போது நீரற்ற இரும்பு(III) பைரோபாசுபேட்டு உருவாகிறது. இரும்பு(III) நைட்ரேட்டு நோனா ஐதரேட்டுடன் பாசுபாரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து வினைபடு பொருள்களை தயாரித்துக் கொள்ள முடியும் [2]. கீழ்கண்ட வினையின் வழியாகவும் இரும்பு(III) பைரோபாசுபேட்டைத் தயாரிக்க முடியும் :[3]

3 Na4P2O7(aq) + 4 FeCl3(aq) → Fe4(P2O7)3(s) + 12 NaCl(aq)

மேற்கோள்கள் தொகு

  1. W.M.Haynes. CRC Handbook of Chemistry and Physics (97th edition). New York: CRC Press, 2016. pp 4-68
  2. LK Elbouaanani, B Malaman, R Gerardin, et al. Crystal Structure Refinement and Magnetic Properties of Fe4(P2O7)3 Studied by Neutron Diffraction and Mössbauer Techniques. Journal of Solid State Chemistry, 2002. 163 (2): 412-420. doi:10.1006/jssc.2001.9415
  3. L. Rossi et al. Colloidal iron(III) pyrophosphate particles. Food Chemistry 151 (2014) 243–247. doi: 10.1016/j.foodchem.2013.11.050

.