இரும்பை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரும்பை என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசன் விரான் (விராஅன்). இவன் இரவலர்க்குத் தேர் வழங்கும் வள்ளல்.
பரணர் - நற்றிணை 350 குறிப்பிடுகிறது.
- தலைவியின் தோள் இரும்பை போல் அழகானது.
- இங்குள்ள மக்கள் நெல் அறுக்கும்போது தண்ணுமைப் பறை முழக்குவார்களாம். அதைக் கேட்டு வயல்களில் மேயும் பறவைகள் பறந்தோடி அங்குள்ள மருத மரத்தில் குந்துமாம். அப்போது மருதப் பூங்கொத்துகள் சிதறுமாம்,
ஓரம்போகியார் - ஐங்குறுநூறு 58 குறிப்பிடுகிறது.
- இங்குள்ள வயல்களில் நெல் மூங்கில் போல் உயர்ந்து வளருமாம். (இக் குறிப்பு மிகை என்றாலும் இது நெல்வளம் மிக்க ஊர் எனத் தெரியவருகிறது.