விரான்
விரான் (விராஅன்) சங்ககால மன்னர்களில் ஒருவன். இவன் இரும்பை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவன். இவன் தேர்வண் விரான் என்று போற்றப்படுகிறான். இதனால் இவன் தேர்க்கொடை நல்கிய வள்ளல் எனத் தெரிகிறது. - பரணர் -நற்றிணை 350
கைவண் விராஅன் இரும்பை அரசன் என்று இவனைப் புலவர் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.(ஐங்குறுநூறு 58). கைவண்மை என்னும் கைவளம் கொடைத்தன்மையைக் குறிக்கும்.