இரு துருவம் (வலைத் தொடர்)
இரு துருவம் என்பது 2019 இல் வெளிவந்த தமிழ் வலைத் தொடர் ஆகும். இத்தொடர் சோனி லிவ் இணைய செயலியில் வெளிவந்தது. எம்.குமரன் இத்தொடரை இயக்கினார். [1]நந்தா, ரவி ஜீவா, அபிராமி வெங்கடாசலம், செபாஸ்டியன் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இருதுருவம் தொடர் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது. இத்தொடரின் அத்தியாயங்கள் 25-30 நிமிடங்கள் ஒளிபரப்பாகக்கூடியது. [2] இத்தொடரை எழுதி இயக்கியவர் ம குமரன். சூர்யபிரசாத் இசையும், ராஜா.கே. பக்தவத்சலத்தின் ஒளிப்பதிவும் செய்திருந்தனர். [3]
நடிகர்கள்
தொகு- நந்தா - விக்டர்
- ரவி ஜீவா - துணை கமிஷனர்
- அபிராமி - கீதா
- செபஸ்டின் ஆன்டனி - குணசேகர் (கொலைகாரன்)
- அப்துல் - கிசோர்
- அனிசா - காயத்ரி
- அஜித் கோசி
- கார்த்திக் நாகராஜன் - ஹேக்கர்
அத்தியாயங்கள்
தொகு- அத்தியாயம் 1: .
- அத்தியாயம் 2: .
- அத்தியாயம் 3:.
- அத்தியாயம் 4:
- அத்தியாயம் 5:
- அத்தியாயம் 6:
- அத்தியாயம் 7: .
- அத்தியாயம் 8: .
- அத்தியாயம் 9: .
கதை
தொகுநாயகன் விக்டர் இன்ஸ்பெக்டர். அவர் திருமணம் ஆனவர். ஆனால் மனைவியை சில காலமாக காணவில்லை என கூறுகிறார். காவல்துறை உயர் அதிகாரிகள் விக்டரே கொலை செய்துவிட்டு மனைவியை காணவில்லை என நடிப்பதாக நினைக்கிறார்கள். விக்டர் தற்போது தனது பெண் குழந்தையுடன் வசிக்கிறார். ஆறு மாதமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் விக்டரை துணை கமிஷனர் அழைத்து புது வழக்கு தருகிறார். இந்த வழக்கை தீர்ந்தால் விக்டரின் மனைவியை கண்டுபிடிக்க கமிஷ்னரிடம் பேசுவதாக கூறுகிறார்.
கட்டிப்போடப்பட்ட நிலையில் வாயில் பலத்த காயத்தை ஏற்படுத்தி கொல்லப்பட்ட பெண்ணின் வழக்கு விக்டருக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து கண்களில் காயப்படுத்தி கொல்லப்பட்ட ஒரு மருத்துவர், காதுகளில் காயம் ஏற்படுத்தி கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் என கொலைகள் பல நடக்கிறது. விக்டர் இக்கொலைகளை செய்தது ஒரே நபர் என்பதையும் ஐந்து புலன்களை தொடர்புபடுத்தி கொலை நடப்பதையும் அறிகிறார். பல கட்ட விசாரணைகள் முடிந்து விக்டர், குணசேகர் என்ற நபரை சந்தேகிக்கின்றார்.
குணசேகரனின் வீட்டை சோதனை செய்து கொலையாளி இவரே என டைரி மூலமாக உறுதி செய்கிறார். ஆதாரத்துடன் கைது செய்ய காத்திருக்கையில் குணசேகரன் தப்பித்து விக்டர் வீட்டிற்கு செல்கிறார். விக்டரும் அதை அறிந்து வீட்டிற்கு செல்கிறார். விக்டரின் குழந்தையை அவர் காப்பாற்றி விடுகிறார். பின்பு குணசேகரனை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார்.
விமர்சனம்
தொகுவிகடன் இதழ் "அதே சமயம், 2000 ஆண்டுகளாய் திருக்குறள் ஒரு மனிதனைப் பண்படுத்தும் எனச் சொல்லிவிட்டு, தமிழ் ஆசான் போல் திருக்குறள் பயிலும் ஒருவன், அதனால் ஈர்க்கப்பட்டுக் கொலை செய்வதும் , திருக்குறள்களையே அங்கு எழுதிவைப்பதும் திரைக்கதை சாமர்த்தியம் என்றாலும், `ஏன் பாஸ் இப்படியெல்லாம், திருவள்ளுவர் பாவம்' எனச் சொல்ல வைக்கிறது" என விமர்சித்தது. [4]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ https://www.republicworld.com/amp/entertainment-news/web-series/iru-dhuruvam-web-series-review-the-crime-thriller-will-keep-you-hooked-read-more.html
- ↑ https://www.thehindu.com/entertainment/movies/sonyliv-announces-tamil-series-iru-dhuruvam/article29573750.ece/amp/
- ↑ https://cinema.vikatan.com/web-series/an-analysis-on-iru-dhuruvam-web-series
- ↑ https://cinema.vikatan.com/web-series/an-analysis-on-iru-dhuruvam-web-series