இரெஜினால்டு இலாசன் வாட்டர்பீல்டு

பிரித்தானியக் குருதியியலாளர், பயில்நிலை வானியலாளர்

இரெஜினால்டு இலாசன் வாட்டர்பீல்டு (Reginald Lawson Waterfield) (12 ஏப்பிரல் 1900 – 10 ஜூன் 1986, வுடுசுட்டன்) ஒரு பிரித்தானியக் குருதியியலாளரும் பயில்நிலை வானியலாளரும் ஆவர். இவர் வானியலிலும் வால்வெள்ளி ஒளிப்படவியலிலும் சிறப்புப் புலமை பெற்றிருந்தார். இவர் 1914 நவம்பர் 25 இல் பிரித்தானிய வானியல்கழகத்துக்கும்1915 நவம்பர் 10 இல் அரசு வானியல் கழகத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்த இரண்டு தேர்வுகளும் வில்லியம் எர்பெர்ட் சுட்டீவன்சனின் முன்மொழிவால் இயன்றன.[3][4] இவர் 1931 இலிருந்து 1942 வரை பிரித்தானிய் வானியல் கழகத்தின் செவ்வாய்ப் பிரிவுக்கு இயக்குநராகவும் பின்னர்1954 இலிருந்து 1956 வரை அதன் தலைவராகவும் இருந்தார். இவர் தன் வானியல் ஆய்வுக்காக, 1942 இல் ஜாக்சந்குவில்ட் பதக்கத்தை வென்றார்.[5] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, போலியோ தாக்கத்தால் உருள்கதிரையைப் பயன்படுத்தலானார்.[6] 1645 வாட்டர்பீல்டு எனும் சிறுகோள் இவரது நினைவாகவும் இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பான வில்லியம் பிரான்சிசு எர்ழ்செல்(1886-1933) நினைவாகவும் பெயரிடப்பட்டது. எர்ழ்செலும் பிரித்தானிய வானியல் கழக உறுப்பினராகவும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராகவும் திகழ்ந்தவர் ஆவார்.[7][8]

இவர் புகழ்பெற்ற ஆசிரியரும் பாதிரியாருமான இரெஜினால்டு வாட்டர்பீல்டின் மகனாவர்.

நூல்கள்

தொகு

இவர் பின்வரும் இரண்டு வானியல் நூல்களை எழுதியுள்ளார்:-

• வானியலில் நூறாண்டுகள், 1938.

• சுழலும் வானகம், 1942.

நினைவேந்தல்கள்

தொகு

QJRAS vol 28 (1987), p. 544[9]

JBAA vol 97 (1987), p. 211[10]

BMJ vol 293 (1986), p. 214[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "1916MNRAS..77....1. Page 1". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  2. "1914JBAA...25..111. Page 111". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  3. "1914JBAA...25...58. Page 58". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  4. "1916MNRAS..76..551. Page 551". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  5. "1942MNRAS.102...41. Page 41". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  6. "British Astronomical Association page". Archived from the original on 2016-06-20. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  7. "1908JBAA...19...65. Page 65". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  8. Dictionary of Minor Planet Names by Lutz D. Schmadel, pg 127
  9. "1987QJRAS..28..544H Page 544". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  10. "1987JBAA...97..211H Page 211". articles.adsabs.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  11. "BMJ Obituary" (PDF). British Medical Journal.{{cite web}}: CS1 maint: url-status (link)