இரெனி வணிகத் துறைமுகம்

உக்ரைனில் உள்ள ஒரு துறைமுகம்

இரெனி வணிகத் துறைமுகம் (Reni Commercial Seaport) உக்ரைன் நாட்டின் தான்யூபு ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுகம் ஆகும். இத்துறைமுகம் உக்ரைனின் முக்கியமான போக்குவரத்து மையமாகும்.[4] நதி, கடல், சாலை மற்றும் இரயில் போக்குவரத்து அனைத்தும் இங்கு நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. ஆண்டு முழுவதும் இங்கிருந்து போக்குவரத்து நடைபெறுகிறது. கப்பல் நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள அதிகபட்ச ஆழம் 3.5-12 மீ (சராசரி 7.5 மீ) ஆகும். இதனால் எந்த வகையான சரக்குகளையும் இங்கிருந்து கையாள முடியும். உக்ரைன் நாட்டுச் சட்டத்தின்படி, உக்ரைன் துறைமுகங்களின் துறைமுக நிர்வாகத்தின் செயல்பாடுகள் உக்ரைனிய கடல் துறைமுக ஆணையத்தின் மாநில நிறுவனமான இரெனி கிளையால் நிர்வகிக்கப்படுகிறது.[5]

இரெனி வணிகத் துறைமுகம்
Reni Commercial Seaport
துறைமுகத்தில் பாரம் தூக்கிகள்
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
பூர்வீக பெயர்
Ренійський морський порт
அமைவிடம்
நாடு உக்ரைன்
அமைவிடம்இரெனி,உக்ரைன், ஒடெசா நிர்வாகப் பிரிவு[1]
ஆள்கூற்றுகள்45°25′15″N 28°17′25″E / 45.42083°N 28.29028°E / 45.42083; 28.29028
விவரங்கள்
திறக்கப்பட்டதுடிசம்பர், 1816
துறைமுகத் தலைவர்யூரி கோனோனெங்கோ
புள்ளிவிவரங்கள்
ஆண்டு சரக்கு டன்னேஜ்1.3 மில்லியன் டன்கள் (டிசம்பர் 20, 2021)[2][3]
வலைத்தளம்
www.portreni.com.ua

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ренійський морський торговельний порт". unian.ua. பார்க்கப்பட்ட நாள் April 12, 2022.
  2. "Ренійський порт виконав річний план з вантажопереробки". agravery.com. 21 December 2021. பார்க்கப்பட்ட நாள் April 12, 2022.
  3. "Порт Рені виконав річний план з переробки вантажів". agrotimes.ua. 20 December 2021. பார்க்கப்பட்ட நாள் April 12, 2022.
  4. "Морський порт Рені". odessa.gov.ua. Archived from the original on ஏப்ரல் 12, 2022. பார்க்கப்பட்ட நாள் April 12, 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Хороші показники: Ренійський морський порт виконав річний план з вантажопереробки". sudohodstvo.org. 21 December 2021. பார்க்கப்பட்ட நாள் April 12, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெனி_வணிகத்_துறைமுகம்&oldid=3927848" இலிருந்து மீள்விக்கப்பட்டது