இரெனீ இலோசெக்
இரெனீ இலோசெக் (Renée Hlozek) (பிறப்பு: நவம்பர் 15,1983) ஒரு தென்னாப்பிரிக்க அண்டவியலாளர் ஆவார் , டொராண்டோ பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் வானியற்பியலுக்கான டன்லாப் நிறுவனத்தில் வானியல் மற்றும் வானியல் இயற்பியல் பேராசிரியராகவும் , கனடிய உயர் ஆராய்ச்சி நிறுவனத்திற்குள் ஒரு அசுரியேலி குளோபல் அறிஞராகவும் உள்ளார்.[1] அவர் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி வகை ஐஏ சூப்பர்நோவா மற்றும் பேரியான் ஒலி அலைவுகளைப் படிக்கிறார். அவர் ஒரு மூத்த TED ஆய்வுறுப்பினராகவும் 2020 இல் சுலோன் ஆய்வுறுப்பினராகவும் ஆனார். இலோசெக் இருபால் உறவு கொண்டவராக அடையாளம் காட்டுகிறார்.[2]
இரெனீ இலோசெக், டொராண்டோ, அக்தோபர் 2019 | |
பிறப்பு | 15 நவம்பர் 1983 |
---|---|
Alma mater | கேப் டவுன் பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
துறை ஆலோசகர் | ஜோ தங்கிளே |
இளமையும் கல்வியும்
தொகுஇலோசெக் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்திலும் , கேப் டவுன் பல்கலைக்கழகத்திலும் கணிதத்தைப் படித்தார். 2008 இல் பட்டம் பெற்றார்.[3] அவர் 2011 ஆம் ஆண்டில் உரோடுசு அறிஞராக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார்.[4][5] அவரது ஆய்வறிக்கை " தொடக்க கால புடவியிலும் இருண்ட ஆற்றலை பல கட்ட அண்டவியல் தரவுகளுடன் ஆய்வு செய்தல் " பற்றியதாகும். இதற்காக இவர்அடாகாமா அண்டவியல் தொலைநோக்கியையும், சுலோன்கணினி வான் அளக்கையையும் பயன்படுத்தினார்.[6] அவரது முனைவர் வழிகாட்டி ஜோ தங்கிளி ஆவார்.[6] ஆக்சுபோர்டில் இருந்த காலத்தில் அவர் கிறிசு இலின்டோட்டின் மக்கள் வானியல் காணொலிப் பர்ப்பிலும் வான்கணியவியலில் 365 நாள் நிகழ்விலும் தோன்றினார்.[7][8]
ஆராய்ச்சியும் தொழிலும்
தொகுமுனைவர் பட்டத்திற்குப் பிறகு , ஹ்லோசெக் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் இலைமான் சுபிட்சர் இளநிலை முதுமுனைவர் ஆராய்ச்சி ஊழியராக சேர்ந்தார்.[3] பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் துருவமுனைப்பு - உணர்திறன் கொண்ட அடாகாமா அண்டவியல் தொலைநோக்கிக்கு அவர் அணியமானார்.[3] 2012 ஆம் ஆண்டில் அவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் சுபிட்சர் - கோட்சன் ஆய்வுறுப்பினராக பணியமர்த்தப்பட்டார்.[3][9] பிரின்சுடனில் அவர் சிறை கற்பித்தல் முயற்சியில் பங்கேற்று, இளம் கறுப்பினப் பெண்களை பிரின்ஸ்டனின் வானியல் துறைகளுக்குள் கொண்டு வருவதற்காக கோப் - பிரின்சுடன் பரிமாற்றத்தை உருவாக்கினார்.[3][10] அவர் கதைசொல்லிக் கொலைடர் நிகழ்வில் பங்கேற்றார். 2013 ஆம் ஆண்டில் அவர் பிரின்சுடனில் உலூசியன் வாக்கோவிக்சு தொடங்கிய அறிவியல் தொடருந்தில் பங்கேற்றார் , அங்கு அவர் வானியல் பற்றி பொதுமக்களிடம் பேச, நியூயார்க் நகர சுரங்கப்பாதைக்குச் சென் று உரையாற்றினார்.[11]
அவர் 2016 ஆம் ஆண்டில் வானியல், வானியற்பியலுக்கான டன்லப் நிறுவனத்தில் சேர்ந்தார்.[12] பிளாங்க்- வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்கலம், பைசெப்(BICEP), கெக் அணி ஆகியவற்றின் தரவுகளுடன் அடாகாமா அண்டவியல் தொலைநோக்கியில் ஒளிமுனைமைக் கருவியுடன் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.[13] அவர் அல்கோன்கின் 46 மீ கதிரலைத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, கதிரலையின் பெயர்நிலைக் குறிகைகளை வகைப்படுத்துகிறார்.[14] இவர் கோட்பாட்டு இயற்பியலுக்கான பெரிமீட்டர் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.[15] 2017 ஆம் ஆண்டில் கனடிய மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்தில் காஸ்மோஸ் நிகழ்வை அவிழ்ப்பதில் பங்கேற்றார்.[16] 2020 ஆம் ஆண்டில் இவருக்கு சுலோன் ஆய்வுறுப்பினர் விருது வழங்கப்பட்டது.[17]
இலோசெக் 2012 இல் ஒரு TED ஆய்வுறுப்பினராகவும் , 2014 இல் ஒரு முதுநிலை ஆய்வுறுப்பினராகவும் தேர்வானார். TED கல்விப்பரப்பில் அவரது பங்களிப்பான " அண்டத்தின் இறப்பு " நிகழ்வு 11 இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.[18] வாங்கூவரில் நடந்த 2014 TED மாநாடு உட்பட பல TED நிகழ்வுகளில் அவர் பேசியுள்ளார்.[19][20][21][22] அறிவியலில் பாலினச் சமநிலையை மேம்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கிறார்.[23][24][25][26]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meet the 2019-2021 cohort of CIFAR Azrieli Global Scholars". CIFAR (in ஆங்கிலம்). 4 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.
- ↑ "Renee Hlozek". 500 Queer Scientists (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-09.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 University, Princeton. "Renée Hlozek - Society of Fellows in the Liberal Arts". www.princeton.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.University, Princeton. "Renée Hlozek - Society of Fellows in the Liberal Arts". www.princeton.edu. Retrieved 27 May 2018.
- ↑ "Renee Hlozek | University of Oxford Department of Physics". www2.physics.ox.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-01. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Renée Hlozek | TED Fellow | TED". www.ted.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 6.0 6.1 "Theses | Atacama Cosmology Telescope". act.princeton.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "365 Days of Astronomy". 365 Days of Astronomy (in அமெரிக்க ஆங்கிலம்). 14 November 2010. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Welcome pubastronomy.com - BlueHost.com". www.pubastronomy.com (in ஆங்கிலம்). Archived from the original on 2020-10-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ Hlozek, Renée (2014). "Small-scale CMB cosmology ACT, Planck and beyond" (PDF). Cornell University. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Hope-Princeton Exchange | TED Blog". blog.ted.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ Lemonick, Michael D. "Ride the Science Train—aka the New York Subway". Time (in அமெரிக்க ஆங்கிலம்). பன்னாட்டுத் தர தொடர் எண் 0040-781X. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Renée Hložek | Astrophysicist, Cosmology Theorist And Astrostatistics Expert |" (in en-US). 2015-11-13. http://successness.com/2015/11/renee-hlozek-interview-astrophysicist-cosmology-theorist-and-astrostatistics-expert/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "TAP Colloquium: Dr. Renée Hlozek | Lunar and Planetary Laboratory | The University of Arizona". www.lpl.arizona.edu (in ஆங்கிலம்). 2017-08-10. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Renee Hlozek | SOSCIP" (in en-US). https://www.soscip.org/researchers/renee-hlozek/.
- ↑ "Renee Hlozek - Inside The Perimeter" (in en-US). https://insidetheperimeter.ca/myfavouriteequation-scientists-share-their-fave-formulae/renee-hlozek/.
- ↑ "Yesterday, Today and Tomorrow - CIFAR : CIFAR". www.cifar.ca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Renée Hložek awarded Sloan Research Fellowship". www.utoronto.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-13.
- ↑ "The death of the universe - Renée Hlozek". TED-Ed (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ TED Archive (2017-08-25), The making of cosmic soup | Renee Hlozek, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
- ↑ TED Archive (2017-12-12), Making sense of everything we know about space | Renée Hlozek, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
- ↑ TEDx Talks (2014-03-25), Disruptive cosmology | Renee Hlozek | TEDxPrincetonU, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
- ↑ TEDxYouth (2014-02-27), Cosmology- Discovering the Unknown: Renee Hlozek at TEDxSpenceSchool, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
- ↑ "032: Strong Women in Science: Cosmologist Prof. Renee Hlozek | The Strong Women's Club". www.thestrongwomensclub.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Women in Science, Interview with Renee Hlozek, Princeton University Cosmologist & TED Fellow | Lady Paragons". ladyparagons.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-05-01. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "The Real Deal: Renee Hlozek, Cosmologist". highheelsinthelab.blogspot.co.uk. 2013-09-30. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "The Strong Women's Club: Fitness business in depth. Health and wellness as tools for success for business women, corporations, female entrepreneurs. : 032: Strong Women in Science: Cosmologist Prof. Renee Hlozek". thestrongwomensclub.libsyn.com. Archived from the original on 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.