இரெபேக்கா எல்சன்

இரெபேக்கா ஆன்னி வுட் எல்சன் (Rebecca Anne Wood Elson) (2 ஜனவரி 1960 – 19 மே 1999[1]) ஒரு கனடிய அமெரிக்க வானியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

இரெபேக்கா எல்சன் (1987)

குவிபெக், மாண்ட்ரீலில் பிறந்த இவர், தன் பதினாட்டை அகவையிலேயே புவியியலாளராகிய தன் தந்தையாருடன் அவரது கள் ஆய்வுகளுக்காக கனடாவுக்குப் பலமுறை சென்றுள்ளார். இவர் முதலில் உயிரியலைத் தேர்வுசெய்தாலும் (குறிப்பாக மரபியலில் ஆர்வம் காட்டினாலும்) பின்னர் வானியலுக்கு மாறி சுமித் கல்லூரியில் வானியலில் இளவல் பட்டம் பெற்றார். இங்கே இவரது ஆசிரியராக வாடிரவுட் சீட்டர் விளங்கினார். இவரது பட்டப்படிப்பில் எடின்பர்கில் உள்ள ஆந்திரூ பல்கலைகழகத்தில் பணியமர்த்தமும் உள்ளடக்கியதாகும். இவர் பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுவர் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்கு நியூட்டன் மாணவ நல்கை கிடைத்தது. அங்கே இவர் தன் முனைவர் பட்டத்தை வானியலில் பெற்றார். முனைவர் பட்டப்படிப்பின்போதே இவர் கேபெராவில் உள்ள மவுண்ட் சுத்திரான்போ வானிகாணகத்தில் கென் பிரீமன் கீழ் பணிபுரிந்துள்லார். இவர் தன் முதுமுனைவர் படிப்பை ஜான் நேத்தா பக்கல் மேற்பார்வையில் உயராய்வு நிறுவனத்தில் மேற்கொண்டார். இவர் 1989 இல் இராடுகிளிப் கல்லூரியில் பண்டிங் ஆய்வுநல்கையைப் பெற்றார். இங்கு இவர் ஆக்கநிலை எழுதலைப் பற்றிப் பாடம் எடுத்தார். இவர் 1990 களில் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவணத்துக்கு வந்து ஆய்வுப் பொறுப்பை ஏற்று தன் எஞ்சிய வாழ்க்கையை அங்கேயே கழித்தார். இவர் ஆய்வு பேரியல் பால்வெளிக் கொத்துகள், வான்வேதியியல் (வேதியியல் படிமலர்ச்சி), பால்வெளி உருவாக்கம் ஆகிய புலங்களில் அமைந்தது. 1990 இல் அபுள் விண்வெளி ஆய்வு மையம் முதல் நோக்கீட்டுப் படிமங்களை வெளியிட்டது. வானியலாலர்கள் அப்படிமங்கள் விண்வெளித் தொலைநோக்கி ஆடியின் பிறழ்வுகளால் வீணாகியதால் மிகவும் கவலைப்பட நேர்ந்தது. என்றாலும், தொலைநோக்கி பழுது பார்க்கப்பட்டதும் எடுக்கப்பட்ட படிமங்கள் வானியல் ஆய்வை முடுக்கிவிட்டது. அப்போது பேரளவு நிதி ஒதுக்கீடு எல்சன் குழுவுக்கே கிடைத்தது.

இவர் தன் 29 ஆம் அகவையில் புற்றுநோய்க்கு ஆட்பட்டார். உரிய மருத்துவம் பெற்றதும் நோய் அடங்கியது. இவர் 1996 இல் இத்தாலிய ஓவியராகிய ஏஞ்சலோ தி சின்ழ்சியாவை மணந்தார். என்றாலும், விரைவிலேயே புற்றுநோய் இவரை மீண்டும் தாக்கியது. இவர் புற்றுநோயால் 1999 இல் தன் 39 ஆம் அகவையில் இறந்தார்.

இவர் தன் பதின் அகவைகளில் இருந்து இதுவரை எழுதிய கவிதைகள் இறப்புக்குப் பின்னர் 2001 இல் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன. இந்தக் கவிதை நூலின் தலைப்புஇன்னலைத் தாண்டும் பொறுப்பு என்பதாகும். இந்நூல் 2002 இல் மீண்டும் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்தக் கவிதைத் தொகுப்பு அவ்வாண்டின் சிறந்த நூலாக பொருளியலாளர் இதழ் தேர்வு செய்தது.[2]

இவர் அவரது குறுகிய வாழ்நாளில் 52 அறிவியல் ஆய்வுத்தாள்களை வெளியிட்டுள்லார்.

நூல்தொகை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hill, Wayne. "Obituary: Rebecca Elson". The Independent. பார்க்கப்பட்ட நாள் 28 July 2016.
  2. "Books of the Year." The Economist. 20 December 2001.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெபேக்கா_எல்சன்&oldid=3652520" இலிருந்து மீள்விக்கப்பட்டது