இரேச்சல் எசு. சோமர்வில்லி

இரேச்சல் எசு

இரேச்சல் எசு. சோமர்வில்லி (Rachel S. Somerville) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் இரட்செர்சுப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியலுக்கான ஜார்ஜ் ஏ. மர்கரெட் எம். டவுன்சுபிரப் பேராசிரியர் க்ட்டிலை அணிசெய்கிறார்.[1] இவை பால்வெளி உருவாக்கம், படிமலர்ச்சி குறித்தகோட்பாட்டு ஆய்வுக்காக அறியப்படுபவர். இவருக்கு 2013 ஆம் ஆண்டின் வானியற்பியலுக்கான டேன்னி கைன்ம்ம் பரிசு வழங்கப்பட்டது.[2] இப்பரிசு “பால்வெளி உருவாக்கம், படிமலர்ச்சி சார்ந்த ஆழ்பார்வையைப் பகுதிப் பகுப்பாய்வு படிமமாக்கம், ஒப்புருவாக்கம், நோக்கீடுகள் ஆகியவற்றின் ஊடாக உருவாக்கித் தந்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.”

வாழ்க்கைப் பணி

தொகு

இரேச்சல் சோமர்வில்லி[3] சாந்தியாகோவில் உள்ள, கணிதம், அறிவியல், கணினியில் பெயர்பெற்ற கோம்பர்சு மேனிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இங்கு இவர் இயற்பியலில் ஆர்வம் கொன்டார்.[4]

இவர் 1989 இல் இயற்பியலில் இளவல் பட்டத்தை இரீடு கல்லூரியி இருந்து பெற்றார். இவர் சாந்த குரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்ஜோயல் பிரிமாக்கின் வழிகாட்டுதலில் முணைவர் பட்டத்தை 1997 இல் பெற்றார். இவர் தன் முதுமுனைவர் ஆய்வை ஜெருசலேமில் உள்ள எபிரேயப் பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் செய்தார். இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் ஆனார். இவர்ரைடல்பர்கில் உள்ள மேக்சு பிளாங்கு வானியல் நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தார். இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்திலும் இணையாக பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் 2011 ஜூலையில் இயற்பியல், வானியல் துறையில் இரட்செர்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். இங்கு இவர் வானியற்பியலுக்கான ஜார்ஜ் ஏ. , மார்கரெட் எம். டவுன்சுபிரப் கட்டிலில் தொடக்கநிலைப் பேராசிரியராக விளங்கினார்.

இவர் தொடக்கநிலைப் புடவியில் பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் சார்ந்த அளக்கைக்கான கூட்சு (GOODS) குழுவில் உறுப்பினர் ஆவார். இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தும் மாபெரும் திட்டமாகிய கேண்டில்சு (CANDELS) அளக்கைசார்ந்த கோட்பாட்டுக் குழுவை வழிநட்த்துகிறார். இவர் பால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும் சார்ந்த இயற்பியல் நிகழ்வுகளின் கணினி ஒப்புருவாக்கங்களுக்காகப் பெயர்பெற்றவர்.[5]

இவர் அலெக் வாலென் எனும் இரட்செர்சுப் பல்கலைக்கழகச் சட்ட, மெய்யியல்சார் பேராசிரியரை திருமணம் செய்துகொண்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "WIA Report on Downsbrough Chair". wiareport.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
  2. Astrophysicist Rachel Somerville Wins 2013 Dannie Heineman Prize for Astrophysics, 2013-01-23, archived from the original on 2013-09-01, பார்க்கப்பட்ட நாள் 2013-09-10
  3. "Rutgers biography of Rachel Somerville". rutgers.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-04-23.
  4. "A Conversation with Theoretical Astrophysicist, Rachel Somerville". 2013-08-30. பார்க்கப்பட்ட நாள் 2013-09-10.
  5. "Article on Rachel Somerville's computer modeling". PhysOrg. 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.

வெளி இணைப்புகள்

தொகு