இரேயன் கோட்டை

ஈரானிய தேசிய பாரம்பரிய தளமான ரேயனில் உள்ள கோட்டை

இரேயன் கோட்டை ( Rayen Castle ) என்பது ஈரானின் கெர்மான் மாகாணத்தின் தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெசார் மஸ்ஜித் மலைகளின் புறநகரில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க செங்கல் கோட்டையாகும். அரண்மனையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள மண் செங்கல் நகரம் ஈரானிய கோட்டைகளின் அடையாளங்களாக அங்கீகரிக்கப்பட்ட ஏராளமான கட்டடக்கலை கூறுகள் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் காட்டுகின்றன. டிசம்பர் 2003 இல் ஏற்பட்ட பூகம்பத்தில் இதன் அருகிலுள்ள ஒத்த கட்டமைப்புகள் பேரழிவைச் சந்தித்தபோதிலும் இந்த வளாகம் நன்கு பாதுகாப்பாக இருந்தது.

இரேயன் கோட்டை
ارگ راین
அர்க்-இ-இரேயன்
இரேயன் கோட்டை
மாற்றுப் பெயர்அர்க்-இ-ரேயன்
இருப்பிடம்கெர்மான், ஈரான்
பகுதிஇரேயன்
வகைகோட்டையகம்
வரலாறு
கட்டுமானப்பொருள்செங்கல்
பகுதிக் குறிப்புகள்
பொது அனுமதிyes

இரேயன் 1868 வரை பயன்பாட்டில் இருந்ததாக கருதப்படுகிறது. குறைந்தபட்சம் 1,000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்பட்டாலும், அது இசுலாமிய காலத்திற்கு முந்தைய சாசானிய சகாப்தத்திற்கு அடித்தளமாக இருக்கலாம். பின்னர் இஸ்லாமிய காலத்தில் சில பகுதிகள் சேர்த்தும் சில பகுதிகள் புதுப்பிக்கவும்பட்டது. சமகால ஆவணங்களின்படி, இது ஒரு முக்கியமான வர்த்தக பாதையில் அமைந்துள்ளது. இது மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் தரமான துணிகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு மையமாக இருந்தது. அத்துடன் வாள் மற்றும் கத்தியும் பிற்காலத்தில் பின்னர், துப்பாக்கிகளும் உற்பத்தி செய்யப்பட்டது. சாசானிய மன்னன் மூன்றாம் யாஸ்டெகெர்டின் ஆட்சியின் போது, அரேபியர்கள் நகரத்தை அதன் உயரமான சுவர்கள் காரணமாகக் கைப்பற்ற முடியவில்லை. [1] இன்று, இக்கோட்டை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. அதன் கலாச்சார முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்களின் பட்டியலில் சேர்த்து இதனை பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புகைப்படங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tours to Iran with Iran Tour Package" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-13.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேயன்_கோட்டை&oldid=3828771" இலிருந்து மீள்விக்கப்பட்டது