இரேவா வில்லியம்சு

அமெரிக்க வானியலாளர

இரேவா கே வில்லியம்சு (Reva Kay Williams) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் டொலெடோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர்தான் க்ருப்பு அமெரிக்கப் பெண்மணிகளில் வானியற்பியலில் முத்லாக முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.[1] இவர் முதன்முதலில் பென்ரோசு செயல்முறையைப் பயன்கொண்டு கருந்துளைகளில் இருந்து ஆற்றலைப் பெற்றவரும் ஆவார்.[2] பென்ரோசு இயங்கமைப்பு அய்ன்சுட்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டைப் பயன்படுத்திச் சுழலும் கருந்துளைகளின் ஆற்றல் மண்டலத்தில் இருந்து பிரித்தெடுக்க உதவுகிறது.

இரேவா கே வில்லியம்சு
Reva Kay Williams
பணியிடங்கள்டொலெடோ பல்கலைக்கழகம்
புளோரிடா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மால்கோல்ம் எக்சு கல்லூரி
வடமேற்கு பல்கலைக்கழகம்
இந்தியானா பல்கலைக்கழகம்,புளூமிங்டன்
அறியப்படுவதுபென்ரோசு செயல்முறை

ஈர்ப்புக் காந்தவியல்

சட்டக இழுவை

இளமையும் கல்வியும்

தொகு

இவர் டென்னசிவேலி மிமிபிசுவில் பிற்ந்தார். இவர் தன் ஆறாம் அகவையில் சிக்காகோ சென்று மால்கோல்ம் எக்சு கல்லூரில் சேர்ந்து 1977 இல் கலை இளவல் பட்டத்தைத் தாராளவியல் கலைகளில் பெற்றுள்ளார். இவர் அந்த ஆண்டின் பட்ட மாணவராக வாக்குகள்வழி ஆனவர் ஆவார்.[3] இவர் 1980 இல் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் வானியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் புளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் படித்து வானியலில் முதுவர் பட்டமும் வானியற்பியலில் 1991 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]

பென்ரோசு இயங்கமைப்பு

தொகு

இவர் தன் முனைவர் ஆய்வுரையை வெளியிட்டதும் கருந்துளைகளின் பென்ரோசு இயங்கமைப்பை பயன்படுத்த முயலும் முதல் பெண்ணாகிறார். இவர் 1995 இல் இயற்பியல் மீள்பார்வையில் தன் முனைவர் ஆய்வில் இருந்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்.[4] கருந்துளைத் தாரை கடுஞ்சூறாவளி போன்ற உயர் ஆற்றல் ஒளியன்கள், மின்னன்கள் கலந்த சீரிலாத தாரைச் சுருள்களாக வெளியேறுவது, கருந்துளைகள் தம் உள்ளகத்தை சுற்றி வெளிகாலத்தை இழுத்து சுழலச் செய்வதால் நேர்வதை இவரது கணக்கீடுகள் விளக்கின.[5]

இவர் 2004 ஏப்பிரலில் கருந்துளை இற்பியலில் கிடைத்த பட்டறிவை கருப்புப் பெண் வானியற்பியலாளர்ட்டம் இருந்து ஒரு சொல்: க்ருந்துளை பற்றிய பதிவை நேர்செய்தல் எனும் தலைப்பில் ஒரு கடிதத்தை வெளியிட்டார். தன் பணிக்கு உரிய சான்றுகள் காட்டாமல் பிறர் தன் பணிக்கான மதிப்பை ஈட்டுவதைத் தடுக்கவே இவ்வாறுசெய்ய நேர்ந்துள்ளது.

முதுமுனைவர் ஆய்வு

தொகு

இவருக்குத் தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் சிறுபான்மை முதுமுனைவர் ஆய்வுநல்கை தரப்பட்ட்தால் 1993 இல்புளோரிடா பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். இவர் 1998 இல் பெல்லி இரிங்கர் படிம முன்காட்டு விருதைப் பெற்று பென்னெட் கல்லூரியில் சேர்ந்து வானியற்பியல் துறை இணைப் பேராசிரியராகவும் பெண்களுக்கும் அறிவியலுக்குமான மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். இவரது ஆய்வுப்பணி ஈர்ப்புக் காந்தவியலையும் கருத்தில் சேர்த்துக் கொண்டது. இவர் கெர் கருந்துளையின் ஆற்றல்கோளத்தில் பென்ரோசு செயல்முறையைத் தெளிவாகப் பார்த்தார்.[2][6] இவரது புறப்பால்வெளிக் கருவின் ஆற்றல் வாயில்களின் தேட்டத்தில் இது ஒரு பெரும்பகுதி ஆக அமைந்தது. கருந்துளைகளின் பென்ரோசு செயல்முறையை ஆய்ந்த முதலாமவர் இவரேயாவார்.[7][8] கருந்துளைத் தாரைகள் ஆற்றலை உமிழ்ந்தமையை இவரது கணக்கீடுகள் விளக்கின. இந்த ஆற்றல் பாய்வு கடுஞ்சூறாவளி போன்ற உயர் ஆற்றல் ஒளியன்களும், சார்பியல்தகவு மின்னன்கள் கலந்த சீரிலாத தாரைச் சுருள்களாக உமிழப்பட்டது.[9][10] இவர் வில்லைச் சுருளாக்க விளைவு உயர் ஆற்றல்களையும் பொலிவுகளையும் உருவாக்கும் என்பதைக் காட்டினார்.[2][11] இவர் ஈர்ப்பு நிலைப்பின்மைகளிலும் தொடக்கநிலைப் புடவியின் கரும்பொருண்ம வடிவத்திலும் கூட ஆர்வம் காட்டலானார். இவர் தன் முதுமுனைவர் ஆய்வுநல்கை முடிந்த பிறகு புளோரிடா பல்கலைக்கழகத்தில் தொடர இயலவில்லை. இவர் காம்மாக்கதிர் வெடிப்புகளொக்கு ஆற்றலூட்ட எப்படி கருந்துளைகளை பயன்படுத்தலாம் எனவும் கருதியுள்ளார். சார்பியல்சார் வானியற்பியை ஆய்வுக்கு புளோரிடா பல்கலைக்கழகம் உடன்படாமையால் இவரது ஆய்வுக்கு நிதி பெற போராடியும் பல்கலை நிதியேதும் நல்க மறுத்தது.

இவர் 2009 இல் இருந்து டொலெடோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராக இருந்துள்ளார்.[12] தேசிய அறிவிய்ல் அறக்கட்டளை செயல்முனைவுப் பால்வெளிக்கருக்கள், துடிப்பண்டங்களின் தாரைக் கட்டமைப்பையும் ஆற்ரல் உருவாக்கத்தையும் ஆய்வு செய்ய நிதி நல்கியது.[13][14] இந்த ஆய்வு மாண்டோகார்லோ ஒப்புருவாக்கத்தை கெர் கருந்துளையின் பொது சார்பியலுடன் ஒருங்கிணத்தது.[13] மீபொருண்மையுள்ள கெர் கருந்துளைதான் செயல்முனைவானபால்வெளிக்கருக்களுக்கு ஆற்றலூட்டுவதை நிறுவியதால்,[2] இவர் பல்வேறு பொருண்மைகளும் அகந்திரள் வட்டு இயல்புகளும் இணைந்த கருந்துளைகள் தாம் செயல்முனைவான பால்வெளிக்கருக்களுக்கும் நுண்துடிப்பண்டங்களுக்கும் காம்மாக்கதிர் வெடிப்புகளுக்கும் ஆற்றல் ஊட்டும் ஒன்றிய படிமத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.[13] இவர் கருப்பு ஆற்றல் ஈர்ப்பின் வெளிப்பாடா என்பதையும் ஆய்வு செய்கிறார்.[15]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "ASTRONOMERS of the African Diaspora (1997-05-27)". www.math.buffalo.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.
  2. 2.0 2.1 2.2 2.3 Williams, Reva Kay (1995-05-15). "Extracting x rays, γ rays, and relativistic e-e+ pairs from supermassive Kerr black holes using the Penrose mechanism". Physical Review D 51 (10): 5387–5427. doi:10.1103/PhysRevD.51.5387. பப்மெட்:10018300. Bibcode: 1995PhRvD..51.5387W. 
  3. "Alumna Dr Reva Kay Williams" (PDF). APPS. 2004-11-04. பார்க்கப்பட்ட நாள் 2018-11-10.
  4. Williams, R. K. (1995). "Extracting X rays, Ύ rays, and relativistic ee+ pairs from supermassive Kerr black holes using the Penrose mechanism". Physical Review D 51 (10): 5387–5427. doi:10.1103/PhysRevD.51.5387. பப்மெட்:10018300. Bibcode: 1995PhRvD..51.5387W. 
  5. Williams, R. K. (2004). "Collimated escaping vortical polar ee+ jets intrinsically produced by rotating black holes and Penrose processes". The Astrophysical Journal 611 (2): 952–963. doi:10.1086/422304. Bibcode: 2004ApJ...611..952W. 
  6. Williams, Reva Kay (November 1999). "Extracting Energy-Momentum from Rotating Black Holes Using the Penrose Mechanism" (in en). APS Southeastern Section Meeting Abstracts 66: JD.03. Bibcode: 1999APS..SES..JD03W. 
  7. Williams, Reva Kay (June 2005). "Gravitomagnetic Field and Penrose Scattering Processes". Annals of the New York Academy of Sciences 1045 (1): 232–245. doi:10.1196/annals.1350.018. பன்னாட்டுத் தர தொடர் எண்:0077-8923. பப்மெட்:15980315. Bibcode: 2005NYASA1045..232W. 
  8. Williams, Reva Kay (2004-04-06). "A Word from a Black Female Relativistic Astrophysicist: Setting the Record Straight on Black Holes". arXiv:physics/0404029. 
  9. Florida, University of. "08 » Astrophysicist Helps Crack A Black Hole Mystery: Energy Jets » University of Florida". news.ufl.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-10.
  10. Williams, R. K. (2004). "Collimated Escaping Vortical Polar e−e+Jets Intrinsically Produced by Rotating Black Holes and Penrose Processes". The Astrophysical Journal 611 (2): 952–963. doi:10.1086/422304. Bibcode: 2004ApJ...611..952W. 
  11. Williams, Reva Kay (2003-06-06). "Production of the High Energy-Momentum Spectra of Quasars 3C 279 and 3C 273 Using the Penrose Mechanism". arXiv:astro-ph/0306135. 
  12. "Research Assistant Professor - Williams, Reva-Kay". www.utoledo.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-10.
  13. 13.0 13.1 13.2 "NSF Award Search: Award#0909098 - Theoretical and Numerical Investigation of a Unified Astrophysical Rotating Black Hole Model for Active Galactic Nuclei, Microquasars, and Gamma-Ray Bursters". www.nsf.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-11-10.
  14. "Physics & Astronomy News". www.utoledo.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-10.
  15. Williams, Reva Kay (2011-09-26). "Could Dark Energy be a Manifestation of Gravity?". arXiv:1109.5652 [physics.gen-ph]. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேவா_வில்லியம்சு&oldid=3952016" இலிருந்து மீள்விக்கப்பட்டது