இரேவு நாயக் பெலம்கி
இரேவு நாயக் பெலம்கி (Revu Naik Belamgi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கருநாடக அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். கர்நாடக மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பணியாற்றினார். கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்திலுள்ள கமலாபூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரேவுநாயக் பெலம்கி 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை குல்பர்கா மாவட்டத்தில் உள்ள குல்பர்கா கிராமப்புறத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2]
இரேவு நாயக் பெலம்கி | |
---|---|
உறுப்பினர், கர்நாடக சட்டப் பேரவை | |
பதவியில் 1994–2008 | |
கர்நாடகா கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் | |
பதவியில் 30 மே 2008 – 12 சூலை 2013 | |
தொகுதி | குல்பர்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி |
தொகுதி | குல்பர்கா ஊரகம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெலம்கி தாண்டா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இரேவு நாயக் பெலம்கி 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் குல்பர்கா கிராமப்புறத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி இவரது தொழில் விவசாயமாகும். 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு தற்போது 82 வயதாகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ GULBARGA MLC ELECTION RESULT 2015: BJP’S B G PATIL WINS
- ↑ Win in Kalaburagi-Yadgir comes as a consolation for the BJP
- ↑ "Revu Naik Belamagi in Karnataka Assembly Elections 2023", News18 (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-12-23