இரையினோ
இரையினோ என்பவர்கள் கரிபியன் தீவுவுகளின் பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் இரையினோ மொழியினைப் பேசினார்கள். ஐரோப்பியர்கள் இத் தீவுகளை 15 ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமிக்க முன்பு இத் தீவுகளில் இவர்கள் பரவி வாழ்ந்தார்கள். இன்றைய கியூபா, யமேக்கா, எயிட்டி, டொமினிக்கன் குடியரசு, புவேர்ட்டோ ரிக்கோ ஆகிய நாடுகளினதும் ஆட்சிப்பகுதிகளினதும் பழங்குடி மக்கள் இவர்கள் ஆவார்கள்.
கொலம்பசு இந்த மக்களைக் கண்டடைந்த போது, இரையினோ மக்கள் வளர்ச்சியடைந்த ஒரு சமூக, அரசியல், சமயக் கட்டமைப்பைக் கொண்டு இருந்தார்கள். இவர்கள் வேளாண்மையில், கடலோடுவதில், மீன்பிடித்தலில், கைத்தொழில்களில் திறைமைவாய்ந்தவர்களாக இருந்தார்கள். வளர்ச்சி பெற்ற கலைகளையும் பண்பாட்டையும் கொண்டு இருந்தார்கள்.[1]
இந்த மக்கள் கிறித்தவர்கள் இல்லாதால் கொலம்பசும் எசுபானியர்களும் இவர்களை சம மனிதர்களாக மதிக்கவில்லை. கிறித்தவ சமயத்தைத் தழுவாத மக்களை அடக்கவும், அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கவும் கிறித்தவ சமய நிறுவனங்களும் ஐரோப்பிய அரசுகளும் உத்தரவு வழங்கி இருந்தன.[2] அடக்கு முறையாலும், போராலும், ஐரோப்பியர்கள் கொண்டு வந்த நோய்களாலும் பெரும்பான்மையான ரையினோ மக்கள் எசுபானியர்களை சந்தித்த சில ஆண்டுகளில் கொல்லப்பட்டார்கள்.[3][4] எசுபானியர்களைச் சந்திக்க முன்பு கரிபியன் தீவுகளில் பரவி இருந்த இந்த மக்கள், அவர்களைச் சந்தித்த பின்னர் வேகமாக அழிக்கப்பட்டார்கள். தனிமைப்படுத்தப்பட்டு இருந்த சிறிய இரையினோ சமூகங்கள், பிற்காலத்தில் எசுபானிய பண்பாட்டு ஆதிகத்து உட்பட்டார்கள்.