இரோசிபா-ஐக்கு அணை

சப்பானின் நாரா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

இரோசிபா-இக்கே அணை (Hiroshiba-ike Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. மண் சார்ந்த பொருள்களால் கட்டப்பட்ட வகை அணையாக 18 மீட்டர் உயரமும் 41 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழிலுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் ஒரு (1) எக்டேராகும். 16 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1939 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

இரோசிபா-இக்கே அணை
Hiroshiba-ike Dam
அமைவிடம்நாரா மாநிலம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°30′25″N 135°57′42″E / 34.50694°N 135.96167°E / 34.50694; 135.96167
திறந்தது1939
அணையும் வழிகாலும்
உயரம்18 மீட்டர்
நீளம்41 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு16 ஆயிரம் கனமீட்டர்
மேற்பரப்பு பகுதி1 எக்டேர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Hiroshiba-ike - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோசிபா-ஐக்கு_அணை&oldid=3504553" இலிருந்து மீள்விக்கப்பட்டது