ஏறுவரிசை, இறங்குவரிசை

(இறங்கு வரிசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏறுவரிசை

தொகு

ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.

உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ்


இறங்குவரிசை

தொகு

இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.

உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறுவரிசை,_இறங்குவரிசை&oldid=4163806" இலிருந்து மீள்விக்கப்பட்டது