இறைசைப் புராணம்

இறைசைப் புராணம் என்பது ‘இறைவாச நல்லூர்ப் புராணம்’ என்னும் நூற்பெயரின் சுருக்கப் பெயர்.
நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு

  • இறைசை என்னும் இறைவாசநல்லூர். இது இக்காலத்தில் எலவானாசூர் என்று வழங்கப்படுகிறது. [1]
  • இது பெண்ணைநாட்டில் உள்ள ஓர் ஊர்.
  • சோழகேரளச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரை முதலாம் இராசராசன் இவ்வூருக்குச் சூட்டினான். [2]
  • இறையாபுரி, இறைவான்றையூர், அரசவனம் என்னும் பெயர்களும் இவ்வூருக்கு உண்டு.
  • ஊர்ப்பாகம் கொண்டருளிய நாயனார் என்பது இவ்வூர் சிவபெருமான் பெயர்.
  • கோயிலின் தல மரம் அரசமரம்
  • இவ்வூரில் திருச்சாழல் [3] ஓதுவதற்காக விக்கிரம சோழன் நிவந்தம் அளித்துள்ளான் [4]
  • செங்கட்சோழன் கட்டிய கோயில் கல்லாகிக் கிடக்கிறது.
  • சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் சாசனங்கள் உள்ளன.

கல்வெட்டு

தொகு
  • நூலைத் திருமலை நயினார் சந்திரசேகரர் பாடினார் என்பது கல்வெட்டுக் குறிப்பு. [5]
  • இந்த நூலைப் பாடியதற்காக இவருக்குக் கோயிலார் இவ்வூர் ஆனந்தத் தாண்டவன் திருவீதியில் ஒரு வீடு தந்திருக்கிறார்கள். [6]

இறைவாச நல்லூர்த் தலபுராணம் [7]

தொகு
  • நூலை இயற்றியவர் புராணத் திருமலை நாயகர். [8]
  • நூல் 8 சருக்கங்களுடன் 376 பாடல்கள் கொண்டது.

நூல் சொல்லும் கதைகள்

தொகு
தருமன் வீமன் உடலில் பாதியை இவ்வூரில் புருசாமிருகத்துக்கு வழங்கினான்.
இராமன் சுக்கிரீவன் நட்பு தோன்றிய இடம்
ஔவைக்குப் பனந்துண்டம் கனி தந்தது.
திருநாவுக்கரசர், சுந்தரர் வரலாறுகளோடுத் தொடர்புடையது
வாளாளர் காரைக்காட்டார் என்னும் கார்காத்த வேளாளர் விளக்கிடு-விழா இங்கு நடைபெறும்.

பாடல்

தொகு

இவ்வூரில் உழுதுண்டு வாழ்பவர் அனைவர்க்கும் வீடுபேறு கிட்டுமாம்.

ஆரூரில் பிறந்தோர்கள், அம்பலத்தைக் கண்டோர்கள், அருள் காசிக்கண்
சீரூர இறந்தோர்கள், கேதாரம் நீராடிச் சிறந்துள்ளோர்கள்,
பேரூரும் அருணகிரி நினைத்தோர்கள், அரசவனம் பிரியாது அன்பாய்
ஏரூர இருந்தோர்கள் கதி பெறுவர் என்றுரைத்தான் இகல்வேற் கந்தன்.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. கடலூர் மாவட்டம்
  2. கி. பி. 987
  3. திருவாசகத்தில் உள்ள பதிகம்
  4. ஆண்டு 1135 சாசனம்
  5. கல்வெட்டு எண் 485, (1938)
  6. கல்வெட்டுக் குறிப்பு ஆண்டு 1510 (சகம் 1432)
  7. திருவான்மியூர் டாக்டர் சாமிநாதையர் நூல்நிலையம், சாமிநாதையர் பேரன் க. சுப்பிரமணிய ஐயர் பாதுகாப்பில் உள்ள காகித ஏட்டுப் படிவம்
  8. ”புராணத் திருமலைநாயகர் அவர்கள் இயற்றிய எலவானாசூர் என வழங்கும் இறைவாச நல்லூர்த் தலபுராணம் திருமுதுகுன்றம் வீரசைவ சுப்பராய தேசிகர் இயற்றிய உரையுடன் கூடியது”- என அந்த ஏட்டுப் படிவத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைசைப்_புராணம்&oldid=1127489" இலிருந்து மீள்விக்கப்பட்டது