இறை ஊழியர் அல்லது இறை பணியாளர் (Servant of God) என்பது ஏதாவது ஒரு மதப்பிரிவின் நம்பிக்கையில் உறுதியாய் இருப்பவர்களைக் குறிக்கும். கிழக்கு மரபுவழி திருச்சபையில் எல்லா கிறித்தவர்களையும் குறிக்கும். அரேபிய மொழியில் அப்துல்லா[1] عبد الله, எபிரேய மொழியில் ஒபதியா עובדיה மற்றும் ஜெர்மன் மொழியில் Gottschalk இறை ஊழியர் என பொருள் படும்.

கத்தோலிக்கம்

தொகு

இறை ஊழியர் அல்லது இறை பணியாளர் என்பது கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் முதல் படியாகும். ஒருவர் இறந்து ஐந்து வருடம் ஆனபின்பே புனிதர் பட்டத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும். குறிப்பிட இடத்தில் உள்ள இறைமக்களால் புனிதர் என நம்பாப்படுகின்றவர்களை அகில உலக திருச்சபையும் ஏற்றுகொள்ள ஆயரால் அளிக்கப்படும் முதல் பட்டமாகும்.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்
  இறை ஊழியர்   →   வணக்கத்திற்குரியவர்   →   அருளாளர்   →   புனிதர்  

ஆதாரம்

தொகு
  1. The Vision of Islam. Sachiko Murata i William C. Chitthick. J.B. Tauris. Pag 125
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறை_ஊழியர்&oldid=1378110" இலிருந்து மீள்விக்கப்பட்டது