இலக்கிளாஞ்சி மின்கலம்
இலக்கிளாஞ்சி மின்கலம் (Leclanché cell) என்பது 1866 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியலாளர் ஜார்ஜெசு இலக்கிளாஞ்சி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டதாகும். இம்மின்கலத்தில் அமோனியம் குளோரைடு மின்பகு கரைசலாகவும் நேர்மின் தகடாக கார்பனும், இதைச் சுற்றி துருவ நீக்கியாக மாங்கனீசு டை ஆக்சைடும், எதிர்மின் தகடாக துத்தநாகமும் செயல்படுகின்றன. இம்மின்கலத்தில் உபயோகமாகும் வேதியியல் பிற்காலத்தில் வெற்றிகரமாக உலர் மின்கலங்கள் பெருமளவு தயாரிப்பில் பின்பற்றப்பட்டது.
வரலாறு
தொகு1866 இல் ஜார்ஜ் இலெக்லாஞ் மின்கலத்தைத் தயாரித்த போது துத்தநாகம் எதிர்மின்வாயாகவும் மற்றும் நுண்ணிய துளைகள் கொண்ட பொருளால் மூடப்பட்டிருக்கும் மாங்கனீசு டை ஆக்சைடு நேர்மின் வாயாகவும் கொண்டு அமோனியம் குளோரைடு கரைசல் உள்ள பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடத்துதலையும் உறிஞ்சுதலையும் மேம்படுத்த நேர்மின் வாயான மாங்கனீசு டை ஆக்சைடில் சிறிதளவு கார்பன் கலக்கப்பட்டிருந்தது.[1] இந்த மின்கலம் 1.4 வோல்ட் மின்னழுத்தத்தை வழங்கியது[2]. தந்தி, மின்மணி, சமிக்ஞை அனுப்புதல் ஆகிய கருவிகளில் விரைவான வெற்றியை தந்தது.
ஆரம்பகால தொலைபேசிகளில் இதன் உலர் மின்கல வடிவம் பயன்படுத்தப்பட்டது. தொலைபேசிக்குத் தேவையான மின்சாரம் அருகாமையில் உள்ள சுவரில் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டியில் இருந்து பெறப்பட்டது. முன்பெல்லாம் தொலைபேசிக் கம்பி வழியாகவேதான் மின்சாரம் பெறப்பட்டது. இலக்கிளாஞ்சி மின்கலத்தால் மிக நீண்டநேர தொலைபேசி உரையாடல்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க இயலவில்லை. மின்கலம் வற்றி பேச்சொலி கேட்கமுடியாமல் போனது.[3] ஏனெனில் மின்கலத்திற்குள் நிகழும் சில வேதிவினைகள் அகமின்தடையை அதிகரிக்கச் செய்தன. எனவே மின்னழுத்தம் குறைந்து விடுகிறது. மின்கலம் பயன்படுத்தப்படாமல் தனியாக இருக்கும்போது இவ்வினை தலைகீழாகிறது. எனவே இடைவிட்டு நிகழ்கின்ற செயல்பாடுகளுக்கு இலக்கிளாஞ்சி மின்கலம் பயன்படுத்துவது சிறந்தது ஆகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zinc-Carbon Batteries, Molecular Expressions. Last accessed Jan 9, 2007". Archived from the original on மார்ச் 21, 2017. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 7, 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ The Boy Electrician by J.W. Simms M.I.E.E. (Page 61)
- ↑ Battery Facts. "Leclanché Cell". பார்க்கப்பட்ட நாள் 2007-01-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ James B. Calvert. "The Electromagnetic Telegraph". பார்க்கப்பட்ட நாள் 2007-01-12.
உசாத்துணை
தொகு- Practical Electricity by W. E. Ayrton and T. Mather, published by Cassell and Company, London, 1911, pp 188–193