இலக்மென் ரிம்புயி

இந்திய அரசியல்வாதி

இலக்மென் ரிம்புயி (Lahkmen Rymbui) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேகாலயா மாநில அரசியலில் இவர் ஐக்கிய சனநாயகக் கட்சி அரசியல்வாதியாகச் செயல்பட்டார். மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 2008 ஆம் ஆண்டு வார் செயிந்தியா சட்டமன்ற தொகுதியித்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் அம்லாரெம் தொகுதியிலிருந்து ஐக்கிய சனநாயகக் கட்சியின் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு முதல் கான்ராட்டு சங்மா அமைச்சகத்தில் எல்லைப் பகுதிகள் மேம்பாடு, கல்வி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், 11/02/2020 முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை மேகாலயாவின் உள்துறை (காவல்துறை) அமைச்சராகவும் இருந்தார். 01/10/2020 முதல் உள்துறை (காவல்துறை), எல்லைப் பகுதிகள் துறை, கல்வி, மாவட்டக்குழு விவகாரங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார்.

2023 சட்டமன்றத் தேர்தலில் அம்லாரம் தொகுதியிலிருந்து ஐக்கிய சனநாகக் கட்சி வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மேகாலயா அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக பதவி வகிக்கிறார் [1] [2] [3] [4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்மென்_ரிம்புயி&oldid=3840205" இலிருந்து மீள்விக்கப்பட்டது