இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் (நூல்)

இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்: அனைத்துலகத் தேடல் ஆங்கிலத்தில் PRIMARY SOURCES FOR HISTORY OF THE SRI LANKAN TAMILS: A world-wide search) எனும் இந்த நூல், கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கைத் தமிழரின் வரலாற்று மூலாவணங்கள் தொடர்பான ஓர் ஆய்வு நூலாகும். இது இவர் எழுதிய இரண்டாவது நூல் ஆகும். இந்த நூல் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பாக இதுவரை எவரும் மேற்கொள்ளாத வகையில் உலகெங்கும், இலங்கை தமிழரின் வரலாற்று ஆவணங்கள் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் தேடிச் சென்று, அந்த மூலாவணங்களைப் பார்வையிட்டு, அவை இருக்கும் இடங்கள், இருக்கும் ஆவணக் காப்பகங்களின் முகவரிகள் போன்றவற்றை நிழப்படங்களுடன் உலகிற்கு வெளிச்சமாக்கிய ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். இதுவரை இலங்கைத் தமிழரின் வரலாற்று மூலாவணங்கள் தொடர்பாக எவருமே அறிந்திராத தகவல்களையும், அவைத் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கு, எந்தெந்த இடங்களில் ஆவணங்கள் உள்ளன எனும் அழைப்பையும் இந்த நூல் ஊடாக வளரும் இளம் தமிழ் சமுதாயத்திற்கு விடுத்திருந்தார். அத்துடன் இந்நூல், இலங்கை தமிழரிடம் மட்டுமன்றி இலங்கை சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுத்தன.

இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்
நூல் பெயர்:இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்
ஆசிரியர்(கள்):முருகர் குணசிங்கம்
வகை:உலகளாவியத் தேடல்
துறை: வரலாற்று மூலாவணங்கள்
காலம்:2005
இடம்:சிட்னி
மொழி:ஆங்கிலம், தமிழ் (இருமொழி நூல்)
பக்கங்கள்:368
பதிப்பகர்:தென் ஆசியவியல் மையம்
பதிப்பு:2005
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
பிற குறிப்புகள்:பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-45428-5

இந்த நூல், 368 பக்கங்களைக் கொண்டது. அத்துடன் இந்நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருமொழி நூலாக, 2005 ஆம் ஆண்டு தென் ஆசியவியல் மையம் பதிப்பகம், சிட்னியில் வெளியிடப்பட்டது.

சிறப்புகள்

தொகு

பாராட்டுகள்

தொகு

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
தளத்தில்
இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் (நூல்)
நூல் உள்ளது.