இலங்கையின் பதிப்புரிமைச் சட்டம்
இலங்கையின் பதிப்புரிமைச் சட்டம் என்பது 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்துப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைவான சட்டம் ஆகும்.[1] இச்சட்டம் 1979 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க குறியீட்டு அறிவுசார் சொத்துச் சட்டத்திற்குப் பதிலாக இயற்றப்பட்ட சட்டம் ஆகும். [2]
சட்டம்
தொகுசட்டத்தில் உள்ளடங்கப்படுபவை
தொகுஇச்சட்டத்தின் ஆறாம் பகுதிக்கு அமைவாக படைப்புக்கள் எனப் பொதுப்பெயர் கொண்டு வழங்கப்படும் இலக்கியம், அறிவியல், கலை சார்ந்த படைப்புக்கள் யாவும் இச்சட்டத்தினுள் அடங்கும் மேலும்
- புத்தகங்கள், குறும்புத்தகங்கள், கணனி நிரற்படுத்தல்கள், கட்டுரைகள், எழுத்துப்படைப்புகள்
- பேச்சுகள், விரிவுரைகள், இதர பேச்சுப் படைப்புகள்
- நாடகங்கள், இசை நாடகங்கள், சிறுவர் நாடகங்கள் மற்றும் இதர மேடைப் படைப்புகள்
- இசைப் படைப்புகள்
- கட்செவிப்புல படைப்புகள்
- கட்டடக்கலைப் படைப்புகள்
- தட்டச்சு, ஓவியம், சிலைகள் போன்ற நுண்கலைப் படைப்புகள்
- படப்பிடிப்புப் படைப்புகள்
- வரைபடங்கள், திட்டங்கள், வடிவமைப்புகள், முப்பரிமாணப் படைப்புகள், புவியியல், அறிவியல் சார்ந்தவை
என அனைத்துப் படைப்புகளுகள், அவற்றின் திரிபுகள், உருமாற்றங்கள், சேமிப்புகள் அனைத்தும் இச்சட்டத்தினுள் அடங்குபவை ஆகும். (ப. 7)
அத்துடன் இச்சட்டத்தின் 8 ஆம் பகுதியின் 26 ஆம் உபபகுதிச் சட்டத்தின் படி
- எண்ணங்கள், தத்துவங்கள், கொள்கைகள்
- உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புகள், உத்தியோகபூர்வ சொற்றொடர்கள், நிர்வாக, சட்ட சொற்றொடர்கள்
- நாளொன்றின் செய்திகள்
ஆகியவையும் இச்சட்டத்தினுள் அடங்கும்.
பதிப்புரிமைக் காலம்
தொகுஒரு படைப்பானது ஒரு ஆசிரியருக்கும் சொந்தமாக இருக்கும் போது, அவ்வாசிரியர் தன் வாழ்நாள் காலம் முழுவதும் இப்பதிப்பை த்ன்னுடைய சொந்த உரிமையாகக் கொண்டுள்ளார். மேலும் அவர் இறக்கும் திகதியிலிருந்து 70 வருடங்களின் பின்னும் இச்சட்டம் செல்லுபடியாகும்.
பதிப்புரிமை மீறல்
தொகுஇச்சட்டத்தினுள் அடங்குகின்ற விடயங்களை குறித்த பதிப்பு அல்லது படைப்பினுடைய உரிமையாளரின் உத்தியோகபூர்வ அனுமதி இன்றி, சட்டத்திற்கு முரணாக அவற்றை பிரதி செய்யும் போது, நீதிமன்றம், சட்டத்தை மீறியவர் மீது தடை, தண்டப்பணம் ஆகியவற்றை விதிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.