இலங்கையில் சுற்றுலாத்துறை

(இலங்கை சுற்றுலாத்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை சுற்றுலாத்துறை இலங்கையின் ஒரு முக்கிய தொழிற்துறை ஆகும். ஒப்பீட்டளவில் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகளை இலங்கை ஈர்க்கிறது. இலங்கையின் நல்ல காலநிலை, இயற்கை அழகு, கடற்கரைகள், வரலாற்று இடங்கள், பண்பாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

இராவணன் அருவியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்

சுற்றுலா ஈர்ப்புகள்

தொகு
 
நல்லூர்

இலங்கையின் சுற்றுலாத்துறை தெற்கிலும், தெங்கிழக்கிலுமே பெரிதும் வளர்ந்துள்ளது. காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலநறுவை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் பெளத்த விகாரகைகள் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.[1]

தமிழ் சுற்றுலாப் பயணிகள்

தொகு

சுற்றுலாப் பயணிகளில் கணிசமான தொகையினர் புகலிடத் தமிழர் ஆவர். பலர் தமது தாயகதைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகின்றனர். சமாதானக் காலத்தில் தமிழர்கள் பெருந்தொகையாக இப்படி வந்தனர்.

தடங்கல்கள்

தொகு

ஈழப் போர், சுனாமி அகியவை பயணிகள் வருகையை சற்றுக் குறைத்தாலும், ஒப்பீட்டளவில் அதிக பயணிகள் ஆண்டுதோறும் இலங்கைக்கு வருகின்றனர். புகலிடத் தமிழர் வெவ்வேறு நாடுகளில் இலங்கை செல்ல வேண்டாம் என்று பரப்புரை செய்வதாலும் வருவோர் தொகை சற்று பாதிக்கப்பட்டிருக்கிறது.

2019 இலங்கை குண்டுவெடிப்புகள்

தொகு

21 ஏப்ரல் 2019 அன்று இலங்கையில் பல இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளால் 250 நபர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். [2] இதனால் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சி பெருமளவில் இறங்குமாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sri Lanka Tourism: Get info on Sri Lanka Travel And Tourism
  2. Sri Lanka attacks: More than 200 killed as churches and hotels targeted

வெளி இணைப்புகள்

தொகு