இராவணன் அருவி

இராவணன் நீர்வீழ்ச்சி (Ravana Falls) இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லைவெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.

இராவணன் நீர்வீழ்ச்சி
இராவணன் அருவி
Map
அமைவிடம்இலங்கை ஊவா மாகாணம்
மொத்த உயரம்25 m (82 அடி)[1]
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீர்வழிகிரிந்தி ஆறு

இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Senanayake, Chanaka (2004) (in si). Sri Lankawe Diyaeli (1st ). Colombo: Sooriya publishers. பக். 51–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-8892-06-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவணன்_அருவி&oldid=3846860" இலிருந்து மீள்விக்கப்பட்டது