இலங்கையில் போர் குற்றங்கள் (நெருக்கடிக் குழு அறிக்கை)

(இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கையில் போர் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நெருக்கடிக் குழு ஒரு விரிவான அறிக்கையை மே 2010 இல் வெளியிட்டத்து. அதில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறது. இந்த போர் குற்றங்கள் இலங்கைப் போரின் கடந்த 30 ஆண்டுகளில் பார்க்க மிக மோசனதாகவும் இது குறிக்கிறது. ஒரு அனைத்துலக விசாரணையை மேற்கொள்ள தமக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.

குறிப்பாக தமக்கு பின்வரும் விடயங்கள் தொடர்பாக அனைத்துல விசாரணை ஒன்றை ஏற்படுத்த தமக்கு ஆதாரங்கள் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது:

இலங்கை அரசு

தொகு

பொதுமக்கள் மீது திட்டமிட்டு எறிகணை வீச்சு

தொகு

சனவரியில் இருந்து, அரசும், படைத்துறையும் மக்களை அரசு கூறிய பாதுகாப்பு வலையத்துக்குப் போகச் சொன்னார்கள். பின்னர் மிகக் கடுமையாக, கூடுதல் வீச்சுடன் அந்த இடங்களுக்கு எறிகணை வீசினார்கள். இது மே வரை நடந்தது. இந்த இடங்கள், அதன் பரப்பளவு, அங்கு இருந்த மக்கள், அவர்களின் பாதிப்புகள் பற்றி அரசுக்கும், படைத்துறைக்கும் நன்றாகத் தெரிந்திருந்தும் இப்படிச் செய்தார்கள்.[1]

மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட எறிகணை வீச்சு

தொகு

நிறைந்த காயப்பட்டவர்களையும், நோயாளிகளையும் கொண்ட நிரந்தர தற்காலிக மருத்துவமனைகள் மீது படைத்துறை எறிகணைத் தாக்குதல்களைச் செய்தது. இவர்களுக்கு இந்த மருத்துவமனைகள் எங்கு இருந்தன என்ற துல்லியமான தகவல் தெரிந்திருந்தும் தாக்குதல் நடத்தினர். இத்தகையை தாக்குதலில் போது ஐ.நா வினதும், செஞ்சிலுவைச் சங்கத்தினது ஊழியர்கள் இந்த தாக்குதல்கள் தொடர்பாக அரசுக்கு அறிவித்த வண்ணம் இருந்தனர், அப்படி இருந்தும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன. இவை மே மட்டும் தொடர்ந்தன. இதனால் மக்கள் இவற்றை விட்டு வெளியேறினர்.[1]

மனிதநேய பணிகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல்

தொகு

எங்கு மனித நேயப் பணிகல் இடம்பெறுகின்றன, எங்கு உணவு விநியோகிக்கப்படுகிறது என்று துல்லியமாகத் தெரிந்து இருந்தும், படைத்துறை தொடர்ச்சியாக அந்த இடங்களை நோக்கி எறிகணைகள் வீசினர். இந்த இடங்கள் மனிதநேயப் பணியார்களாலும், வாகங்கள் மற்றும் உபகரணங்களாலும், பொதுமக்களாலும் நிறைந்திருந்தன. அடிப்படை மனித நேய உதவியை வழங்குவதிலும், பெறுவதில் ஈடுபடுகையில் பலர் கொல்லப்பட்டனர்.[1]

விடுதலைப் புலிகள்

தொகு

திட்டமிட்டு பொது மக்களைச் சுடுதல்

தொகு

சண்டை இடத்தை விட்டு வெளியேறி, அரச கட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு செல்ல முயன்ற மக்கள் மீது விடுதலைப் புலிகள் சுட்டுக் பல பொது மக்களைக் கொன்றார்கள், காயப்படுத்தினர்.[1]

திட்டமிட்டு பொது மக்களை இன்னல்படுத்தல்

தொகு

சண்டை இடத்தை விட்டு மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. எறிகணை வீச்சு, அடிப்படை வசதிகள் இன்மை, காயப்பட்டோர், சாகக் கிடந்தோர் என எவற்றையும் விடுதலைப் புலிகள் பொருட்படுத்தவில்லை. மேலும் பொது மக்களை சண்டை பிடிக்க, அல்லது இதர வேலைகளுக்கு கட்டாயப் பணியில் ஈடுபடுத்தினர். குடும்ப உறுப்பினர்கள் அதை எதிர்த்தால், அவர்களை தண்டித்தார்கள்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 War Crimes in Sri Lanka - International Crisis Group - May 17, 2010

வெளி இணைப்புகள்

தொகு