இலங்கை வான்படை நூதனசாலை

இலங்கை வான்படை நூதனசாலை அல்லது இலங்கை வான்படை அருங்காட்சியகம் என்பது இலங்கை வான்படையின் நூதனசாலையும் ரோயல் சிலோன் வான்படையின் நூதனசாலையும் ஆகும். இது இரத்மலானை விமான நிலையத்தில் அமைந்துள்ளதுடன் இலங்கை வான்படையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.[1] இலங்கை வான்படையினதும் ரோயல் சிலோன் வான்படையினதும் விமானங்கள், உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2] சிலோனிய இலங்கையின் முதலாவது வான்படைத் தளபதி இ. ஆர். அமரசேகரவினது வாள் மற்றும் பதக்கங்கள் ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருட்களாகும். இரண்டாம் உலகப் போரின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பானிய விமானத்தின் எச்சங்களும் இங்கு காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் 2009 கொழும்பு தற்கொலை விமான தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை வான்படை நூதனசாலையினுள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உலங்கு வானூர்தி
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிலின் இசட் 43 வானூர்தியின் எஞ்சிய பகுதிகள்

மேற்கோள்கள்

தொகு
  1. "The Air Force has its own museum, the Sri Lanka Air Force Museum situated at the SLAF Base, Ratmalana". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.
  2. "The museum houses one of the largest collection of military artefacts anywhere in the country, if not for anything else the sheer bulk of its aircraft which occupy a good part of the museum". பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2016.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_வான்படை_நூதனசாலை&oldid=3864166" இலிருந்து மீள்விக்கப்பட்டது