இலங்ரா, மாம்பழம்
இலங்ரா (Langra) என்பது தொடக்கத்தில் வட இந்தியாவில் உள்ள பனாரசு, வங்காளதேசம், பாக்கித்தான் [1][2] ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட ஒரு வகையான மாம்பழ இனம் ஆகும். பனாரசி இலங்ரா என்ற பெயராலும் இம்மாம்பழம் அழைக்கப்படுகிறது [3]. பழுக்கும் போது இந்த மாம்பழவகை பச்சை நிறத்தில் இருக்கிறது. பொதுவாக சூலை மாதத்தின் கடைசி பாதியில் இப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையிலும் இப்பழம் பிரபலமடையத் தொடங்கியது [4]. துண்டுகளாக்கவும் பதப்படுத்தவும் ஏற்ற பழமாக இலங்ரா மாம்பழம் கருதப்படுகிறது [5].
இலங்ரா மாம்பழம்' | |
---|---|
'பீகார் மாநிலத்திலுள்ள ஒரு பண்னையில் இலங்ரா மாம்பழம். | |
பேரினம் | மேங்கிபெரா |
பயிரிடும்வகை | 'இலங்ரா' |
இலைகள்
தொகு
இதன் இலைத்தாள்கள் முட்டை-ஈட்டி வடிவங்களாகவும் சிறிது மடிந்து தட்டையாகவும் இருக்கின்றன. மேல்முனைகள் அதி கூரியனவாக உள்ளன. இரண்டாம் நிலை நரம்புகள் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக துணை வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன [6] அவைகளின் அளவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
- இலைத்தாளின் நீளம்: 21,93 செ.மீ.
- இலை அலகு நீளம்: 18,95 செ.மீ.
- இலை அலகின் அகலம்: 4.75 செ.மீ.
- இலைக்காம்பின் நீளம்: 2.98 செ.மீ.
- புடைப்புக் காம்பு மண்டலத்தின் நீளம்:1.20 செ.மீ
- நீளம்: இலை அலகு அகலம்: 4.00
- புடைப்புக் காம்பு நீளம்: இலைக்காம்பு: 0.42
- இலை அலகு நீளம்:இலைக்காம்பு: 6.67 செ.மீ
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-20.
- ↑ "Varieties of Mango produced in West Bengal | Bengal Information - College, Admission, Events, Education, Tourism, Bengal Culture, Jobs". Bengal Information. 2012-09-12. Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
- ↑ "Mango Malformation". Dkchakrabarti.com. 2010-03-12. Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-11-27. பார்க்கப்பட்ட நாள் 2017-01-20.
- ↑ "Mango". Hort.purdue.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
- ↑ Chakraborti, Kalyan (1970-01-01). "Leaf Charactersand Measurements Of Mango Cultivars In | Kalyan Chakraborti". Academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.