இலட்சுமண் பாண்டுரங் ஜக்தாப்பு

இந்திய அரசியல்வாதி

இலட்சுமண் பாண்டுரங் ஜக்தாப்பு (Laxman Pandurang Jagtap) ( மராத்தி: लक्ष्मण पांडुरंग जगताप ; 15 பிப்ரவரி 1963 - 3 ஜனவரி 2023) புனே நகரத்தில் உள்ள சின்ச்வாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009 – 2014 ஆம் ஆண்டுக்கான மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக சின்ச்வாட்டில் இருந்து சுயேச்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சின்ச்வாட் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

இலட்சுமண் பாண்டுரங் ஜக்தாப்பு
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009 – 3 சனவரி 2023
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி
தொகுதிசின்ச்வாட் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிர சட்டமன்றக் குழு உறுப்பினர்
பதவியில்
2004–2009
முன்னையவர்சந்துக்கா ஜக்தாப்பு
தொகுதிபுனே உள்ளக அமைப்புகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1963-02-15)15 பெப்ரவரி 1963
இறப்பு3 சனவரி 2023(2023-01-03) (அகவை 59)
பேனர், புனே, மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அஸ்வினி ஜக்தாப்பு

ஜக்தாப் 2014 மக்களவைத் தேர்தலில் மாவல் தொகுதியில் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார்.[2] 2014ல் மீண்டும் அதே சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

ஜக்தாப் 3 ஜனவரி 2023 அன்று தனது 59 வயதில் இறந்தார் [3]

இவரின் மறைவுக்குப் பிறகு சின்ச்வாட் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இவரது மனைவி அஷ்வினி ஜக்தாப், என்சிபி வேட்பாளரை தோற்கடித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Profile on MyNeta site". பார்க்கப்பட்ட நாள் 25 April 2014.
  2. "List of Contesting candidate - phase II" (PDF). Chief Electoral Officer, Maharashtra. p. 3. பார்க்கப்பட்ட நாள் 25 April 2014.
  3. Blow to BJP in Pune as influential MLA Laxman Jagtap passes away