இலட்சுமண் மாணிக்கியா
இலட்மண் மாணிக்கியா (Lakshman Manikya) 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த மகாராஜாவாக இருந்தார், இருப்பினும் இவர் சிறிய அதிகாரத்தையே தக்க வைத்துக் கொண்டார், சம்சேர் காசியின் கீழ் ஒரு பொம்மை-மன்னராக மட்டுமே செயல்பட்டார்.
இலட்சுமண் மாணிக்கியா | |
---|---|
திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மன்னன் | |
முன்னையவர் | மூன்றாம் விசய மாணிக்கியா |
பின்னையவர் | சம்சேர் காசி |
பிறப்பு | வனமாலி தாக்கூர் |
குழந்தைகளின் பெயர்கள் | துர்கா மாணிக்கியா |
மரபு | மாணிக்கிய வம்சம் |
தந்தை | கதாதர் தாக்கூர் |
மதம் | இந்து சமயம் |
வாழ்க்கை
தொகுமுதலில் வனமாலி தாக்கூர் என்று பெயரிடப்பட்ட[1] இவர் இரண்டாம் தர்ம மாணிக்கியாவின் பேரன் ஆவார்.[2][3]
1748 ஆம் ஆண்டில், திரிபுராவின் கட்டுப்பாட்டை வங்காள முஸ்லிம் ஜமீந்தாரான சம்சேர் காசி கைப்பற்றினார்.[4] இராச்சியத்தின் குடிமக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்ட காசி, வனமாலியை இலட்மண் மாணிக்கியா என்ற பெயரில் அரியணையில் அமர்த்தினார். இருப்பினும் உண்மையான அதிகாரம் அவரே வைத்திருந்தார். இலட்மண் மக்களின் ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், இது மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. இறுதியில், காசியால் வெளியேற்றப்பட்டார். அவர் தானே அரியணையை எடுத்துக் கொண்டார். இருப்பினும் அவரது ஆட்சி குறுகியதாக இருந்தபோதிலும், அசல் மாணிக்கிய வம்சம் 1760 இல் அதிகாரத்தை மீட்டெடுத்தது.[5][6] இவரது மகன் துர்கா மாணிக்கியாவும் பின்னர் திரிபுராவின் ஆட்சியாளரானார், 1809 முதல் 1813 வரை ஆட்சி செய்தார்.[7]
சான்றுகள்
தொகு- ↑ Bibhas Kanti Kilikda (1995). Tripura of Eighteenth Century with Samsher Gazi Against Feudalism (A Historical Study). Tripura State Tribal Cultural Research Institute & Museum, Government of Tripura. p. 75.
- ↑ Choudhury, Achyut Charan (2000) [1910], Srihatter Itibritta: Purbangsho (in Bengali), Kolkata: Kotha, p. 502
- ↑ Durlabhendra; Sukheshwar; Baneshwar (1999). Sri Rajmala. Translated by Kailāsa Candra Siṃha; N.C. Nath. Agartala: Tribal Research Institute, Govt. of Tripura. p. 176.
- ↑ Roychoudhury, Nalini Ranjan (1983). "Shamser Gazi (1748-1760)". Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D. Sterling. p. 35.
- ↑ Sharma, Suresh Kant; Sharma, Usha (2005). Discovery of North-East India: Geography, History, Culture, Religion, Politics, Sociology, Science, Education and Economy. Tripura. Volume eleven. Mittal Publications. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-045-1. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.
- ↑ Sur, Hirendra Kumar (1986). British Relations with the State of Tripura, 1760-1947. Saraswati Book Depot. p. 14.
- ↑ Gan-Chaudhuri, Jagadis (1980). Tripura, the land and its people. Leeladevi Publications. pp. 33–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121004480.
இவரது மகன் துர்கா மாணிக்கியாவும் பின்னர் திரிபுராவின் ஆட்சியாளரானார், 1809 முதல் 1813 வரை ஆட்சி செய்தார் [1]
சான்றுகள்
தொகு- ↑ Gan-Chaudhuri, Jagadis (1980). Tripura, the land and its people. Leeladevi Publications. pp. 33–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121004480.