இலட்சுமி நிவாசு பிர்லா
இலட்சுமி நிவாசு பிர்லா (Lakshmi Niwas Birla) இந்தியாவின் பிர்லா குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராகவும், புகழ்பெற்ற தொழிலதிபர், பரோபகாரர், எழுத்தாளர் மற்றும் கலை நிபுணராகவும் பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.
கன்சியாம் தாசு பிர்லா மற்றும் அவரது முதல் மனைவி துர்காதேவியின் மூத்த மகன் இலட்சுமி நிவாசு பிர்லா ஆவார். பின்னர் இவரை இயூகல் கிசோர் பிர்லா தத்தெடுத்தார். இவர் சுசிலா தேவியை மணந்தார், 1934 ஆம் ஆண்டில் நடந்த திருமணத்திற்குப் பின்னர் சுதர்சன் குமார் பிர்லா என்ற ஒரு மகனைப் பெற்றார்.[1][2]
1951 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை தலைவராகவும், 1967 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.[3][4]
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பல புத்தகங்களை எழுதினார். புகழ்பெற்ற கலை நிபுணராகவும் இருந்தார்.[5][6]
இந்து கோயில்களைக் கட்டுவதற்காக பணத்தை நன்கொடையாக வழங்கினார். டர்பனில் உள்ள இந்து கோயிலின் சிலைகள் இவரது நன்கொடைகளிலிருந்து வாங்கப்பட்டன.[7]
1941 ஆம் ஆண்டில் இந்தி உயர்நிலைப் பள்ளி என்றும் அழைக்கப்படும் பிர்லா உயர்நிலைப்பள்ளியை நிறுவினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kudaisya, Medha M. (2003). The Life and Times of G.D. Birla (in ஆங்கிலம்). Oxford University Press. pp. xvi, 194, 414. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-564572-9. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ Pandey, Medha M. Kudaisya Edit by Sangam (10 November 2021). Yugpurush Ghanshyamdas Birla (in இந்தி). Vāṇī Prakāśana. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5518-092-6.
- ↑ "Past Presidents". Indian Chamber of Commerce. பார்க்கப்பட்ட நாள் 27 August 2022.
- ↑ "FICCI Past Presidents". ficci.in. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ Congress, The Library of. "Birla, L. N. - LC Linked Data Service: Authorities and Vocabularies | Library of Congress, from LC Linked Data Service: Authorities and Vocabularies (Library of Congress)". id.loc.gov. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ "NLI AUT MultiLang - Full View of Record". uli.nli.org.il. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ Hindutva (in ஆங்கிலம்). 1976. p. 89. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.