இலத்திரன் நாட்ட சக்தி
நியம நிபந்தனையில் வாயு நிலையிலுள்ள மூலகமொன்றின் ஒரு மூல் அணுக்கள் முடிவிலியிலிருந்து ஒரு மூல் இலத்திரன்களை ஏற்றுக்கொண்டு ஒரு மூல் மறையேற்றமுள்ள அயனைத் தோற்றுவிக்கும் போது வெளிவிடப்படும் சக்தியே இலத்திரன் நாட்ட சக்தி (Electron affinityஆகும். இதன் போது ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு இலத்திரனை ஏற்பதுடன் ஒவ்வொன்றும் ஒரு மறையேற்றமுள்ள அயனை உருவாக்குகின்றது.[1]
வாயு நிலை அணுக்கள் இலத்திரன் ஏற்றலின் போது
1. இறுதி உபபடியில் S2, P6, 2P3 நிரம்பலைக் கொண்டுள்ள அணுக்கள் இவற்றிற்கு அடுத்துள்ள உபபடியிலேயே இலத்திரன் ஏற்கும்.
அவ் உபபடி சக்தி கூடியது ஆகையால் இவை இலத்திரன் ஏற்கும் போது ஒரு பகுதி சக்தியை உறிஞ்சும். ( அகவெப்பம் )
2. இறுதி உபபடியில் S2, P6 நிரம்பலைக் கொண்டிரா அணுக்கள் இலத்திரன் ஏற்கும் போது நிரம்பலற்ற அவ்வுபபடிகளிலேயே
இலத்திரனை ஏற்கும்.
கரு இலத்திரன்களை கவருவதால் இவை இலத்திரன் ஏற்கும் போது ஒரு பகுதி சக்தி விடுவிக்கப்படும். ( புறவெப்பம் )
- X + e− → X− + சக்தி
அலகு: kJ/mol
ஆவர்த்தன இயல்பு
தொகுஇலத்திரன் நாட்ட சக்தி ஆவர்த்தன அட்டவணையில் பல்வேறு விதத்தில் வேறுபட்டாலும், ஒவ்வொரு கூட்ட மூலகங்களும் ஒரு பொது ஆவர்த்தன இயல்பைக் காட்டுகின்றன. பொதுவாக 17ம் கூட்ட மூலகங்களான புளோரின், குளோரின், புரோமின், அயோடின் ஆகியவற்றின் இலத்திரன் நாட்ட சக்தியே அதிகமாக உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களுள் குளோரினின் (Cl) இலத்திரன் நாட்ட சக்தியே அதிகமாகும். 2, 7, 15, 18ம் கூட்ட மூலகங்கள் அவற்றின் இலத்திரன் நிலையமைப்பின் உறுதித்தன்மை காரணமாக இலத்திரன்களை இலகுவில் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே அருமன் வாயுக்களினது 2ம் கூட்ட மூலகங்களில் Be, Mg, 7ம் கூட்ட மூலகங்களில் Mn, Tc, Re, மற்றும் நைதரசன் ஆகியவற்றின் இலத்திரன் நாட்ட சக்தி அறியப்படவில்லை.
ஆவர்த்தன அட்டவணையில் இலத்திரன் நாட்ட சக்தி | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Group → | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | ||||||||||||
↓ Period | ||||||||||||||||||||||||||||||
1 | H 73 |
He * | ||||||||||||||||||||||||||||
2 | Li 60 |
Be * |
B 27 |
C 122 |
N * |
O 141 |
F 328 |
Ne * | ||||||||||||||||||||||
3 | Na 53 |
Mg * |
Al 42 |
Si 134 |
P 72 |
S 200 |
Cl 349 |
Ar * | ||||||||||||||||||||||
4 | K 48 |
Ca 2 |
Sc 18 |
Ti 8 |
V 51 |
Cr 65 |
Mn * |
Fe 15 |
Co 64 |
Ni 112 |
Cu 119 |
Zn * |
Ga 41 |
Ge 119 |
As 79 |
Se 195 |
Br 324 |
Kr * | ||||||||||||
5 | Rb 47 |
Sr 5 |
Y 30 |
Zr 41 |
Nb 86 |
Mo 72 |
Tc * |
Ru 101 |
Rh 110 |
Pd 54 |
Ag 126 |
Cd * |
In 39 |
Sn 107 |
Sb 101 |
Te 190 |
I 295 |
Xe * | ||||||||||||
6 | Cs 46 |
Ba 14 |
Hf |
Ta 31 |
W 79 |
Re * |
Os 104 |
Ir 150 |
Pt 205 |
Au 223 |
Hg * |
Tl 36 |
Pb 35 |
Bi 91 |
Po |
At |
Rn * | |||||||||||||
7 | Fr |
Ra |
Rf |
Db |
Sg |
Bh |
Hs |
Mt |
Ds |
Rg |
Cn |
Uut |
Fl |
Uup |
Lv |
Uus |
Uuo | |||||||||||||
La 45 |
Ce 92 |
Pr |
Nd |
Pm |
Sm |
Eu |
Gd |
Tb |
Dy |
Ho |
Er |
Tm 99 |
Yb |
Lu 33 | ||||||||||||||||
Ac |
Th |
Pa |
U |
Np |
Pu |
Am |
Cm |
Bk |
Cf |
Es |
Fm |
Md |
No |
Lr | ||||||||||||||||
விளக்கம் | ||||||||||||||||||||||||||||||
இலத்திரன் நாட்ட சக்தி kJ/mol அலகில் தரப்பட்டுள்ளது | ||||||||||||||||||||||||||||||
* குறியீடு இலத்திரன் நாட்ட சக்தி பூச்சியம் அல்லது அதற்கு அருகான மதிப்பைக் குறிக்கிறது | ||||||||||||||||||||||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Electron affinity". Compendium of Chemical Terminology Internet edition.