நெடுங்குழு 14 தனிமங்கள்
14 ஆவது தொகுதி தனிமங்கள் (Group 14 elements) அல்லது நெடுங்குழு 14 தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையின் 14 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களைக் குறிக்கும். ஐயூபிஏசி முறை பெயரிடலிலும் இப்பெயரே பரிந்துரைக்கப்படுகிறது. இத்தொகுதியை கார்பன் தொகுதி சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள். கார்பன் (C), [[சிலிக்கன் (Si), செருமேனியம் (Ge), வெள்ளீயம் (Sn), ஈயம் (Pb), மற்றும் பிளெரோவியம் (Fl). உள்ளிட்ட தனிமங்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன. குறைக்கடத்தி இயற்பியலில் இன்னமும் இக்குழுவை நான்காம் தொகுதி சேர்மங்கள் என்று அழைக்கிறார்கள். ஒருகாலத்தில் நான்குகள் எனப் பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான டெட்ரா என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டதால் டெட்ரல் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது. இத்தொகுதியிலுள்ள அனைத்துத் தனிமங்களும் இணைதிறன் எலக்ட்ரான்களை 4 எனக் கொண்டுள்ளன என்பதைக் குறிப்பதாக அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நெடுங்குழு 14 தனிமங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
↓ Period | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2 | கரிமம் (C) 6 Polyatomic nonmetal | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3 | சிலிக்கான் (Si) 14 Metalloid | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4 | ஜேர்மானியம் (Ge) 32 Metalloid | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
5 | வெள்ளீயம் (Sn) 50 Poor metal | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
6 | ஈயம் (Pb) 82 Poor metal | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
7 | பிளெரோவியம் (Fl) 114 unknown chemical properties | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Legend
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பண்புகள்
தொகுவேதிப்பண்புகள்
தொகுZ | தனிமம் | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை |
---|---|---|
6 | கரிமம் | 2, 4 |
14 | சிலிக்கான் | 2, 8, 4 |
32 | ஜேர்மானியம் | 2, 8, 18, 2 |
50 | வெள்ளீயம் | 2, 8, 18, 18, 4 |
82 | ஈயம் | 2, 8, 18, 32, 18, 4 |
114 | பிளெரோவியம் | 2, 8, 18, 32, 32, 18, 4 (கணிக்கப்பட்டது) |
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தனிமமும் அதன் வெளிப்புறக் கோளப்பாதையில் அதாவது அணுவின் உயர் ஆற்றல் மட்டத்தில் 4 எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கின்றன. இக்குழுவில் உள்ள அனைத்து தனிமங்களும் பொதுவான எலக்ட்ரான் அமைப்பாக ns2 np2 சுற்றுப்பாதை அமைப்பைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இத்தொகுதியில் சில உலோகப்போலிகளுடன் சேர்ந்து உலோகங்களும் அலோகங்களும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் இத்தொகுதிச் சேர்மங்கள் சகப்பிணைப்பு சேர்மங்களை உருவாக்குகின்றன. அதிக அளவு அயனியாக்கும் ஆற்றலை இத்தொகுதி சேர்மங்கள் பெறுகின்றன. மேலிருந்து கீழாகச் செல்லும்போது இந்த ஆற்றல் குறைகிறது. அணுவின் அளவு அதிகரிக்கும் போது எலெக்ட்ரான்களை இழப்பதற்கான போக்கும் அதிகரிக்கிறது, ஏனெனில் இவற்றினுடைய அணு எண்ணும் அதிகரிக்கிறது. கார்பன் மட்டுமே கார்பைடு (C4-) அயனிகளின் வடிவில் எதிர்மறை அயனிகளாக உருவாகிறது. சிலிக்கான் மற்றும் செருமானியம் என்ற இரண்டு உலோகப்போலிகளும் ஒவ்வொன்றும் +4 அயனிகளாக உருவாகின்றன. வெள்ளீயமும் ஈயமும் உலோகங்களாகும். பிளெரோவியம் செயற்கைத் தனிமமாகும். கதிரியக்கத் தன்மையும் குறைந்த அரை வாழ்வுக் காலமும் கொண்டதாக இது உள்ளது. சில மந்த வாயுப் பண்புகளை இது பெற்றுள்ளது. வெள்ளீயமும் ஈயமும் +2 அயனிகளாக மாறும் தன்மையையும் கொண்டுள்ளன.
கார்பன் ஆலைடுகள் அனைத்துடனும் வினைபுரிந்து டெட்ரா ஆலைடுகளை உருவாக்குகிறது. கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு, கார்பன் கீழாக்சைடு என்ற மூன்று ஆக்சைடுகளை கார்பன் உருவாக்குகிறது. மேலும் கார்பன் டை சல்பைடுகள், டைசெலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் உருவாக்குகிறது [1].
SiH4 மற்றும் Si2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை சிலிக்கன் உண்டாக்குகிறது. புளோரின், குளோரின், அயோடின் போன்ற ஆலைடுகளுடன் சேர்ந்து சிலிக்கன் டெட்ரா ஆலைடுகளைத் தருகிறது. மேலும் சிலிக்கன் டையாக்சைடு, சிலிக்கன் டை சல்பைடு[2] போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது. சிலிக்கன் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Si3N4 ஆகும்[3] Carbon's importance to life is primarily due to its ability to form numerous bonds with other elements.[4].
GeH4 மற்றும் Ge2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை செருமேனியம் உண்டாக்குகிறது அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளை உருவாக்குகிறது. புரோமின் மற்றும் அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டை ஆலைடுகளை உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற ஒற்றை சால்கோகென்கள் அனைத்துடன் இது வினைபுரிகிறது. டை ஆக்சைடுகள். டை சலபைடுகள், டை செலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் செருமேனியம் உருவாக்குகிறது. செருமேனியம் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Ge3N4 ஆகும் [5].
SnH4 மற்றும் Sn2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை வெள்ளீயம் உண்டாக்குகிறது. அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் வெள்ளீயம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளையும் டை ஆலைடுகளையும் உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற அனைத்து இயற்கையில் தோன்றும் சால்கோகென்களுடனும் இது வினைபுரிந்து சால்கோகெனைடுகளைத் தருகிறது [6].
PbH4 என்ற ஐதரைடை ஈயம் உண்டாக்குகிறது. ஈயம் குளோரின் மற்றும் புளோரின் இவற்றுடன் வினைபுரிந்து டை ஆலைடு மற்றும் டெட்ரா ஆலைடுகளைக் கொடுக்கின்றது. புரோமினுடன் டெட்ரா புரோமைடைத் தருகிறது. டெட்ரா புரோமைடும் டெட்ரா அயோடைடும் நிலைப்புத் தன்மை அற்றவை.நான்கு ஆக்சைடுகளையும், சல்பைடு, செலீனைடு, தெலூரைடு போன்ற சேர்மங்களை ஈயம் உண்டாக்குகிறது [7].
பிளெரோவியத்தின் சேர்மங்கள் ஏதும் அறியப்படவில்லை [8].
மேற்கோள்கள்
தொகு- ↑ Carbon compounds, பார்க்கப்பட்ட நாள் January 24, 2013
- ↑ Silicon compounds, பார்க்கப்பட்ட நாள் January 24, 2013
- ↑ Gray, Theodore (2011), The Elements
- ↑ Kean, Sam (2011), The Disappearing Spoon
- ↑ Germanium compounds, பார்க்கப்பட்ட நாள் January 24, 2013
- ↑ Tin compounds, பார்க்கப்பட்ட நாள் January 24, 2013
- ↑ Lead compounds, பார்க்கப்பட்ட நாள் January 24, 2013
- ↑ Flerovium compounds, பார்க்கப்பட்ட நாள் January 24, 2013