யூரோப்பியம்
யூரோப்பியம் அல்லது ஐரோப்பியம் (Europium) தனிம அட்டவணையில் Eu என்னும் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 63. இத் தனிமத்தின் அணுக்கருவினுள் 89 நொதுமிகள் உள்ளன. இத்தனிமத்தின் பெயர் ஐரோப்பாவைப் பின்பற்றி வைக்கப்பட்டது.
யூரோப்பியம் | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
63Eu
| ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||
வெள்ளி போல் வெண்மை | ||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | யூரோப்பியம், Eu, 63 | |||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /jʊˈroʊpiəm/ ew-ROH-pee-əm | |||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | இலந்தனைடு | |||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | [[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 6, f | |||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
151.964 | |||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Xe] 4f7 6s2 2, 8, 18, 25, 8, 2 | |||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | யூஜின் அனத்தோல் டிமார்சே (1896) | |||||||||||||||||||||||||||||||||
முதற்தடவையாகத் தனிமைப்படுத்தியவர் |
யூஜின் அனத்தோல் டிமார்சே (1901) | |||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 5.264 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 5.13 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 1099 K, 826 °C, 1519 °F | |||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 1802 K, 1529 °C, 2784 °F | |||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 9.21 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 176 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 27.66 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 3, 2, 1 (மென் கார ஆக்சைடு) | |||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | ? 1.2 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 547.1 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||
2வது: 1085 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
3வது: 2404 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 180 பிமீ | |||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 198±6 pm | |||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | எளிய கட்டகம் (பருநடு) | |||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | இணைக்காந்தம்[1] | |||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (அ.வெ.) (பல்படிகம்) 0.900 µΩ·m | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | அண். 13.9 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (அ.வெ) (பல்படிகம்) 35.0 µm/(m·K) | |||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 18.2 GPa | |||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 7.9 GPa | |||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 8.3 GPa | |||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.152 | |||||||||||||||||||||||||||||||||
விக்கெர் கெட்டிமை | 167 MPa | |||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-53-1 | |||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: யூரோப்பியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க பண்புகள்
தொகுயூரோப்பியம் அரிதில் கிடைக்கும் கனிமங்களிலேயே மிகுந்த வேதியியல் வினைபற்றும் தன்மை உடையது. எளிதாக காற்றில் ஆக்ஸைடாகின்றது. நீருடன் வேதியியல் வினையுறும்பொழுது இது கால்சியத்துடன் ஒத்துள்ளது. விரைந்து ஆக்ஸிஜனுடன் இணைவதால், தனி மாழையாகத் திண்மமாக எண்ணெய்க்குள் வைத்து இருந்து தந்தாலும் பளபளப்பில்லாமல் மங்கியே காணப்படுகின்றது. யூரோப்பியம், காற்றில் 150 °C முதல் 180 °C வெப்பநிலையில் தீப்பற்றுகின்றது. இது ஈயம் போல கெட்டியாகவும், எளிதில் தட்டி கொட்டி தகடாக்கும் தன்மை உடைய பொருள்.
பயன்பாடுகள்
தொகுவணிகக் கோணத்தில் ஒரு சில பயன்பாடுகளே கொண்டுள்ளது லேசர்களில் (சீரொளி மிகைப்பிகளில்) புறவூட்டுப் பொருளாகப் பயன்படுகின்றது. டௌன் சிக்கல்குறைபாடு போன்ற மரபணுக் குறைபாடுகளுக்கான சோதனைகளில் இம்மாழை பயன்படுகின்றது. நொதுமிகளை (நியூட்ரான்களை)ப் பற்றிக்கொள்வதால் அணுநிலையங்களில் பயன் பெறுகின்றது. தொலைக்காட்சிகளில் உள்ள எதிர்மின்னிக் குழல் திரைகளில் சிவப்பு நிறம் தரும் ஒளிரியாக யூரோப்பியம் ஆக்ஸைடு (Eu2O3) பயன்படுகின்றது. இதே போல புளோரசண்ட் விளக்குகளிலும் பயன்படுகின்றது. மூன்று இயைனி (trivalent) யூரோப்பியம் சிவப்பு ஒளிரியையும், ஈரியைனி (divalent) யூரோப்பியம் நீல நிற ஒளிரியையும் தருகின்றது. இந்த இரு நிறங்களுடன் மஞ்சள்/பச்சை நிற டெர்பியம் ஒளிரியும் சேர்ந்து மூன்று நிற விளக்குகளைக் கொண்ட ஒளி அமைப்புகள் விலை மலிவுடன் அமைக்க வழி வகுக்கின்றது. மருந்து உற்பத்தியில் உயிரியமூலக்கூறுகள் பற்றிய வினைகளைத் தேர்வு செய்ய யூரோப்பியம் பயன்படுகின்றது. கள்ள யூரோ பணத்தாள்கள் செய்வதைத் தடுக்கும் முகமாக ஒளிரிகளள் பதிக்கப் பயன்படுகின்றது[2]
வரலாறு
தொகுயூரோப்பியம் முதன் முதலாக பால் எம்மீல் லெக்காக் டி புவாபௌட்ரான் (Paul Émile Lecoq de Boisbaudran]] என்பவரால் 1890ல் கண்டுபிடிக்கப்பட்டது. சமாரியம்-கடோலினியச் சேர்க்கைப் பொருள்களை ஆய்வு செய்யும் பொழுது அவ்விரு பொருட்களையும் சேரா ஓர் ஒளிமாலைக் கோடுகளைக் கண்டறிந்து யூரோப்பியம் இருப்பதை உணர்ந்தனர். எனினும் யூரோப்பியத்தை 1896ல் கண்டுபிடித்ததாக பிரெஞ்சு வேதியியலாளர் யூஜீன் அனட்டோல் டிமார்சே (Eugène-Anatole Demarçay]) அவர்களைக் கூறுவர். இவர் பின்னாளில் 1901ல் யுரோப்பியத்தைத் தனியாகப் பிரித்தெடுத்தார்.
கிடைக்கும் மலிவு
தொகுயூரோப்பிய சேர்மங்கள்
தொகுஓரிடத்தான்கள்
தொகுஓரிடத்தான்கள் | 151Eu | 152Eu | 153Eu | 154Eu | 155Eu |
---|---|---|---|---|---|
விளைவு | ~10 | low | 1580 | >2.5 | 330 |
Barns | 5900 | 12800 | 312 | 1340 | 3950 |
இயற்கையாகக் கிடைக்கும் யுரோப்பியம் 151Eu மற்றும் 153Eu ஆகிய இரண்டு ஓரிடத்தான்களைக் (ஐசோடோப்புகளைக்) கொண்டுள்ளன, இவற்றில் 153Eu பெருமளவு காணப்படுகின்றன (52.2%). 153Eu நிலையான ஓரிடத்தானாகும், அதேவேளையில் 151Eu அல்ஃபா சிதைவுக்கு நிலையற்றதாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதன் அரைவாழ்வுக் காலம் 5+11
−3×1018 a ஆகும்,[3] அதாவது, ஒவ்வொரு கிலோகிராம் இயற்கை யுரோப்பியத்திலும் இரு நிமிடங்களுக்கு ஒரு ஆல்ஃபா தேய்வு இடம்பெறுகிறது. இயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான் 151Eu ஐத் தவிர, 35 செயற்கைக் கதிரியக்க ஓரிடத்தான்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன, இவற்றில் 150Eu மிகவும் நிலையானது. இதன் அரைவாழ்வு 36.9 ஆண்டுகள், 152Eu இன் அரைவாழ்வு 13.516 ஆண்டுகள், 154Eu இன் அரைவாழ்வு 8.593 ஆண்டுகள். ஏனையவற்றின் அரைவாழ்வுகள் 4.7612 ஆண்டுகளுக்கும் குறைவானவை, இவற்றில் பெரும்பாலானவற்றின் அரைவாழ்வுகள் 12.2 செக்கன்களுக்கும் குறைவானவை.
153Eu ஐ விட இலகுவான ஓரிடத்தான்களின் முக்கியமான கதிரியக்கம் இலத்திரன் பிடிப்பு மூலமும், பாரமான ஓரிடத்தான்களின் முக்கிய கதிரியக்கம் பீட்டா சிதைவு மூலமும் இடம்பெறுகின்றது.
தொழிற்துறைக் கதிரியலில் யுரோப்பியம்
தொகுகதிரியக்கம் இல்லாத அணுநிறை 151, 153 கொண்ட இரு ஓரிடத்தான்களை வெப்ப நியூத்திரன்களால் தாக்கும் போது அணுநிறை 152 (47.77%), 154 (52.23%) கொண்ட இரு கதிரியக்க ஓரிடத்தான்கள் கிடைக்கின்றன.
- 63 Eu151+N → 63Eu152+γ1
- 63Eu153+N→63Eu154 +γ2
அதிக ஒப்புக் கதிரியக்கமுடைய 152Eu, 154Eu பெறுவது சாத்தியமானதே. மேலும் அணுநிறை 155 கொண்ட ஒரு ஓரிடத்தானும் கிடைக்கிறது. அது மிகக் குறைவாகவே உள்ளது. 152Eu, 154Eu இரண்டையும் தனித்தனியாகப் பிரிப்பது கடினமானதும் அதிக செலவாகக் கூடியதுமாக இருக்கிறது. 152E (26%) β துகளை உமிழ்ந்து 64Gd152 ஆக மாற்றமடைகிறது. மீதமுள்ள 152Eu இலத்திரன் பிடிப்பு முறையில் 62Sm152 ஆக மாற்றமடைகிறது.[4] 154Eu, β வை வெளியிட்டு 64Gd154 ஆக மாறும் போது பல γ கதிர்கள் வெளிப்படுகின்றன. அவைகளின் ஆற்றல் 0.122 முதல் 1.005 MeV வரையாகும்.
152Eu இன் அரைவாழ்வுக் காலம் 12.7 ஆண்டுகள், 154Eu இன் அரைவாழ்வு காலம் 16 ஆண்டுகள் ஆகும், சாதகமான இப்பண்புகளால் அவை தொழில்துறையில் பயனாகின்றன.
முன்காப்புக் குறிப்புகள்
தொகுஇதன் நச்சுத்தன்மை முழுவதுமாக இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. மற்ற எடை மிகுந்த மாழைகளைக்காட்டிலும் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளதென்று கொள்ளுவதற்கான் முன்குறிபாடுகள் ஏதும் இல்லை. இம்மாழையின் துகள்கள் தீப்பற்றும் வாய்ப்புள்ளது. உயிர் உடலியக்கத்தில் ஏதும் குறிப்பிட்ட பயன்பாடுகள் உள்ளனவா என்று இன்னமும் தெரியவில்லை.
யூரோப்பியத்தைப் பிரித்தெடுப்பது
தொகுயூரோப்பியம் விற்பனைக்குக் கிடைப்பதால் ஆய்வகங்களில் சிறப்பாகச் செய்யத்தேவை இல்லை.
மேற்கோள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுஅடிக்குறிப்புகளும்
தொகு- ↑ Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
- ↑ "Europium and the Euro". Archived from the original on 2009-08-04. பார்க்கப்பட்ட நாள் 2007-12-08.
- ↑ Belli, P. et al. (2007). "Search for α decay of natural europium". Nuclear Physics A 789: 15–29. doi:10.1016/j.nuclphysa.2007.03.001. Bibcode: 2007NuPhA.789...15B.
- ↑ Nucleonica (2007–2011). "Nucleonica: Universal Nuclide Chart". Nucleonica: Universal Nuclide Chart. Nucleonica. பார்க்கப்பட்ட நாள் July 22, 2011.
{{cite web}}
: CS1 maint: date format (link)