சூல் (அலகு)

(யூல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூல் (joule; ஜூல்; இலங்கை வழக்கு: யூல், குறியீடு: J) என்பது ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான சேமுசு பிரிசுகாட்டு சூல் என்பவரின் பெயரைத் தழுவி இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1][2][3]

சூல்
joule
அலகு முறைமைஅனைத்துலக முறை அலகுகள்
அலகு பயன்படும் இடம்ஆற்றல்
குறியீடுJ
பெயரிடப்பட்டதுசேமுசு பிரிசுகாட்டு சூல்
அலகு மாற்றங்கள்
1 J இல் ...... சமன் ...
   எசு.ஐ. அடிப்படை அலகுகள்   கிகிமீ2செ−2
   செமீ.கி.செ. அலகுகள்   1×107 எர்கு
   வாட்டு.செக்கண்டுகள்   1 வாசெ
   கிலோவாட் மணிகள்   2.78×10−7 kW⋅h
   கலோரிகள் (வெப்பவேதி)   2.390×10−4 kcalth
   பி.வெ.அலகுகள்   9.48×10−4 BTU
   இலத்திரன்வோல்ட்கள்   6.24×1018 eV

விளக்கம்

தொகு

ஒரு சூல் என்பது, ஒரு நியூட்டன் அளவுள்ள விசை ஒன்று அவ்விசையின் திசையில் ஒரு மீட்டர் நகரும் பொழுது செய்யப்படும் வேலையின் அளவு ஆகும். இந்த அளவு நியூட்டன் மீட்டர் என்றும் குறிக்கப்படுவது உண்டு. நியூட்டன் மீட்டர் "N.m" என்னும் குறியீட்டால் எழுதப்படும்.

அடிப்படை அலகுகளில்,

 
 

மேற்கோள்கள்

தொகு
  1. American Heritage Dictionary of the English Language, Online Edition (2009). Houghton Mifflin Co., hosted by Yahoo! Education.
  2. The American Heritage Dictionary, Second College Edition (1985). Boston: Houghton Mifflin Co., p. 691.
  3. McGraw-Hill Dictionary of Physics, Fifth Edition (1997). McGraw-Hill, Inc., p. 224.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்_(அலகு)&oldid=3588815" இலிருந்து மீள்விக்கப்பட்டது