வேதிக் குறியீடு

வேதிக் குறியீடு அல்லது இரசாயனக் குறியீடு (Chemical Symbol) என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.[1]

ஆசியத்தின் வேதிக் குறியீடு

வேதிக் குறியீட்டை எழுதுதல்

தொகு

வேதிக் குறியீட்டை எழுதும்போது முதலெழுத்து மாத்திரமே பேரெழுத்தாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, ஈலியத்திற்கான குறியீடு He ஆகும் (Helium என்ற ஆங்கிலச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).[2] ஈயத்துக்கான குறியீடு Pb ஆகும் (Plumbum என்ற இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).[3] தங்குதனுக்கான குறியீடு W ஆகும் (Wolfram என்ற இடாய்ச்சு மொழிச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).[4]

தனிமம் பற்றிய தகவல்கள்

தொகு

வேதிக் குறியீட்டில் குறிப்பிட்ட தனிமம் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்படுவதுண்டு.

மூன்று எழுத்துகளாலான குறியீடு

தொகு

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களுக்கு மட்டும் தொடக்கத்தில் மூன்று எழுத்துகளினாலான குறியீடு வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் Uno என்ற தற்காலிகக் குறியீடு ஆசியத்துக்கு வழங்கப்பட்டது.[6] இப்போது Hs என்ற குறியீடு பயன்படுத்தப்படுகின்றது.[7]

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. வேதிக் குறியீட்டின் வரைவிலக்கணம் (ஆங்கில மொழியில்)
  2. தனிம வரிசைப் பட்டியல்: ஈலியம் (ஆங்கில மொழியில்)
  3. தனிம வரிசைப் பட்டியல்: ஈயம் (ஆங்கில மொழியில்)
  4. தனிம வரிசைப் பட்டியல்: தங்குதன் (ஆங்கில மொழியில்)
  5. "விஞ்ஞானம் தரம் 10 பகுதி-2 ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி" (PDF). Archived from the original (PDF) on 2009-08-24. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
  6. Uno (ஆங்கில மொழியில்)
  7. தனிம வரிசைப் பட்டியல்: ஆசியம் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிக்_குறியீடு&oldid=3572577" இலிருந்து மீள்விக்கப்பட்டது