இலத்திரன்வோல்ட்

(இலத்திரன் வோல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயற்பியலில், எலட்டிரான் வோல்ட்டு அல்லது இலத்திரன் வோல்ட்டு (electron volt, eV) என்பது ஆற்றலின் ஓர் அலகாகும். இதனை எதிர்மின்னி-வோல்ட்டு என்றும் குறிப்பிடலாம்.

பிணைப்பற்ற, விடுபட்ட, இலத்திரன் ஒன்று ஒரு வோல்ட்டு அளவுள்ள மின் அழுத்த வேறுபாட்டைக் கொண்ட மின்புலத்தினூடாக முடுக்கப்படும்போது அவ் இலத்திரன் பெறும் ஆற்றல் ஓர் இலத்திரன் வோல்ட்டு ஆகும்.

1 eV = 1.602 176 53×10−19 J

ஓர் இலத்திரன் வோல்ட்டு என்பது ஓர் எதிர்மின்னியின் (இலத்திரனின்) மின்மமாகிய (மின்னூட்டமாகிய) 1.602 176 53(14)×10−19 கூலுமை, 1 வோல்ட்டால் பெருக்க வரும் ஆற்றல் அளவு. ஒரு வோல்ட்டு என்பது 1 யூல் வகுத்தல் 1 கூலும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

எலட்டிரான் வோல்ட்டு என்பது மிகச்சிறிய அலகாகும். கதிரியலிலும் பிற அறிவியல் துறையிலும் கிலோ எலட்டிரான் வோல்ட்டு (KeV ), மெகா எலட்டிரான் வோல்ட்டு (MeV ) அலகுகளில் அளவிடப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்திரன்வோல்ட்&oldid=3318453" இலிருந்து மீள்விக்கப்பட்டது