இலத்தீன் பேரரசு மீதான மங்கோலியப் படையெடுப்பு
1242ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஒரு மங்கோலியப் படையானது காண்ஸ்டாண்டிநோபுளின் இலத்தீன் பேரரசு மீது படையெடுத்தது. பல்கேரியாவில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த கதானின் தலைமையிலான ஒரு இராணுவப் பிரிவான இப்படை பேரரசுக்குள் வடக்கு திசையிலிருந்து நுழைந்தது. இது பேரரசர் இரண்டாம் பால்டுவினைச் சந்தித்தது. முதல் சந்திப்பில் பால்டுவின் வெற்றி பெற்றார். எனினும் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்டார்.
இந்தச் சந்திப்பு திரேசில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும், இப்படையெடுப்பு பற்றி சிறிதளவு தகவல்களே உள்ளன. பால்டுவின் மற்றும் மங்கோலியக் கான்களுக்கு இடையிலான இறுதியான தொடர்புகளின்படி, பால்டுவின் கைதுசெய்யப்பட்டு மங்கோலியர்களுக்கு அடிபணியவும், திறை செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டார் என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படையெடுப்பு மற்றும் இதற்கு அடுத்த ஆண்டு 1243இல் நடத்தப்பட்ட அனத்தோலியா மீதான மங்கோலியப் படையெடுப்பு, பால்டுவின் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட்டது ஆகியவை ஏகன் உலகத்தில் அதிகார மாற்றத்தை விரைவுபடுத்தின.[1]
உசாத்துணை
தொகு- ↑ (Madgearu 2016, ப. 230–31); (Vásáry 2005, ப. 70n): Tartari et Chumani nemine resistente et occurrente, recesserunt ab Ungaria cum infinita preda auri et argenti, vestium, animalium, multos et captivos utriusque sexus ducebant in obproprium christianorum. Qui intrantes Greciam totam terram illam depopulabant, exceptis castellis et civitatibus valde munitis. Rex vero Constantinopolitanus nomine Paldwinus, congressus est cum eis, a quo primo victi in secunda congressione victus est ab eis.