இலமினுசா தீவு

பிலிப்பீன்சில் உள்ள ஒரு தீவு

இலமினுசா தீவு (Laminusa Island) பிலிப்பைன்சு நாட்டின் சுலு மாகாணத்தில் உள்ள சியாசி நகராட்சியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். சுலு தீவுக்கூட்டத்தில் இட்டம்பெற்றுள்ள தீவுகளில் இதுவும் ஒன்றாகும். மின்டானோ மற்றும் போர்னியோ தீவுகளுக்கு இடையே உள்ள தீவுகளின் சங்கிலியாக இலமினுசா தீவு பார்க்கப்படுகிறது.

இலமினுசா தீவு
Laminusa Island
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/மிண்டானோ" does not exist.
புவியியல்
ஆள்கூறுகள்5°33′3″N 120°55′12″E / 5.55083°N 120.92000°E / 5.55083; 120.92000
அருகிலுள்ள நீர்ப்பகுதிசுலாவெசி கடல்
பரப்பளவு0.78 km2 (0.30 sq mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை12,830
அடர்த்தி16,449 /km2 (42,603 /sq mi)

கண்ணோட்டம் தொகு

நிர்வாக ரீதியாக இலமினுசா தீவு சியாசி நகராட்சியின் ஒரு பகுதியாகும் [1] இத்தீவு பின்வரும் பேரங்கே எனப்படும் நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது :

  • காங்-காங் இலமினுசா
  • உலுக் இலமினுசா
  • பூகன் இலமினுசா
  • தம்பகன் இலமினுசா
  • தெங்கா இலமினுசா
  • தோங் இலமினுசா

நிலவியல் தொகு

இலமினுசா தீவு சுலு தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியாகும். சியாசி தீவிலிருந்து கிழக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தீவின் மொத்த நிலப்பரப்பு 0.78 சதுரகிலோமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது

மக்கள்தொகையியல் தொகு

இலமினுசாவின் மொத்த மக்கள் தொகை 12,830 ஆகும். ஒப்பீட்டளவில் இத்தீவு பிலிப்பைன்சில் காணப்படும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தீவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இலமினுசா [2] தீவில் அடங்கியுள்ள நிர்வாகப் பிரிவுகளின் மக்கள்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாகப் பிரிவு மக்கள் தொகை (2020)
இலமினுசா 1,686
உலுக் இலமினுசா 1,442
பூகன் இலமினுசா 2,328
தம்பகன் இலமினுசா 2,862
தெங்கா இலமினுசா 1,590
தோங் இலமினுசா 2,922
மொத்தம் 12,830

மேற்கோள்கள் தொகு

  1. "Siasi, Sulu". Department of Interior and Local Government.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Municipality of Siasi - Philippine Standard Geographic Code". Philippine Statistics Authority. பார்க்கப்பட்ட நாள் 2022-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலமினுசா_தீவு&oldid=3593559" இலிருந்து மீள்விக்கப்பட்டது