இலவந்திகைப்பள்ளி

இலவந்திகை என்பது மன்னன் தென்றலில் உலவுவதற்காக அமைக்கப்பட்ட பூங்காப் பந்தல்.[1]

புகார் நகரத்தில் இலவந்திகைப்பள்ளி இருந்ததைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன.[2]

பாண்டிய நாட்டிலும் இது போன்றதோர் இலவந்திகைப்பள்ளி இருந்திருக்கிறது. உத்தரகோசமங்கை என்னும் ஊர் இது எனக் கூறப்படுகிறது.

சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி [3], பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்[4] ஆகிய வேந்தர்களின் இறுதிக்காலம் இவ்வூரில் முடிந்திருக்கிறது.

இவர்கள் துஞ்சியது அவரவர் நாட்டு இலவந்திகைப்பள்ளியில் என்க.

மேற்கோள் தொகு

  1. “கலையிலாளன் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும் பன்மலர் அடுக்கிய நன்மலர்ப் பந்தர்” – சிலப்பதிகாரம் நாடுகாண் காதை
  2. பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகை – மணிமேகலை 3-45
  3. புறநானூறு 61
  4. புறநானூறு 55, 56, 57, 198, 196,
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவந்திகைப்பள்ளி&oldid=1496188" இலிருந்து மீள்விக்கப்பட்டது