இலவுரீ இரவுசியவு நெப்டன்

இலவுரீ இரவுசியவு நெப்டன் (Laurie Rousseau-Nepton) ஒரு கனடா-பிரான்சு-அவாய் தொலைநோக்கியில் பணிபுரியும் கனடிய வ

இலவுரீ இரவுசியவு நெப்டன் (Laurie Rousseau-Nepton) ஒரு கனடா-பிரான்சு-அவாய் தொலைநோக்கியில் பணிபுரியும் கனடிய வானியலாளர் ஆவார். இவர் அவாய் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். இவர் தான் முதுமுனைவர் பட்டம் பெற்ற முதல் கனடிய நாட்டுக் கியுபெக்கியப் பிறந்தகப் பெண்மணி ஆவார்.[1][2]

இலவுரீ இரவுசியவு நெப்டன்
Laurie Rousseau-Nepton
தேசியம்கனடா
துறைவானியற்பியல்]]
பணியிடங்கள்கனடா-பிரான்சு-அவாய் தொலைநோக்கி
கல்வி கற்ற இடங்கள்இலவால் பல்கலைக்கழகம்]]
Academic advisorsகார்மெல்லி இராபர்ட்

இளமையும் கல்வியும்

தொகு

இவர் இலவால் பல்கலைக்கழகத்தில் இருந்து 2017 இல் பேரா. கார்மெல்லி இராபர்ட் மேற்பார்வையில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்,][3]இவரது முனைவர்பட்ட ஆய்வு அண்மையில் அமைந்த சுருள் பால்வெளிகளின் H II வட்டாரத்தைப் பற்றியதாகும். இந்த ஆய்வுக்கு இவர் இலவால் பல்கலைக்கழகத்தில் உருவாக்கிய சுபையோம்(SpIOMM) எனும் பூரியர் உருமாற்றப் படம்பிடிப்பு கதிர்நிரல் அளவியைப் பயன்படுத்தினார்.[3][4]

ஆராய்ச்சி

தொகு

இவர் 2017 இல் இருந்து கனடா-பிரான்சு-அவாய் தொலைநோக்கியில் உறைவிட வானியற்பியலாளராக உள்ளார்[5]

 
கனடா-பிரான்சு-அவாய் வானியல் நோக்கீட்டகம், மவுனாக் கீ மலைமுகடு, அவாய்த்தீவு. (புரவலர், நாசா)

இவர் சிக்னல்சின் முதன்மை ஆய்வாளர் ஆவார். சிக்னல்சுத் திட்டம்(SIGNALS ) அருகாமையில் உள்ள விண்மீனாக்கப் பால்வெளி வட்டாரங்களில் அமைந்த 50,000 விண்மீன்கள் நோக்கீடு செய்யும் வானளக்கைத் திட்டம் ஆகும்[6].

தகைமைகளும் விருதுகளும்

தொகு

இவர் பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளார்.[7]

  • முதுமுனைவர் ஆய்வு உறுப்பினர்ரியற்கைத் தொழில்நுட்பங்களுக்கான கியூபெக் ஆராய்ச்சி நிதி(Fonds de Recherche du Québec – Nature et Technologies (FRQNT)), 2017
  • சிறந்த அறிவியல் உரைக்கான பியேர் அமியோத் விருது, இலவால் பல்கலைக்கழகம், 2014
  • கியூபெர்ட் இரீவுசு ஆய்வுத்தகைமை, கியூபெர்ட் இரீவுசு நிதி, 2010
  • அறிவியலில் பிறந்தக மகளிருக்கான ஆய்வுத்தகைமை, கியூபெக் பல்கலைக்கழகத்தின்மகளிர் பட்டக் கழகம்(Association des femmes diplômées des universités du Québec (AFDU)), 2010

மேற்கோள்கள்

தொகு
  1. "LAURIE ROUSSEAU NEPTON – Women In Physics Canada 2018" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-10.
  2. "Fonds Nature et technologies - An indigenous astrophysicist in Hawaii". www.frqnt.gouv.qc.ca (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  3. 3.0 3.1 Rousseau-Nepton, Laurie (2017). Étude des régions de formation stellaire dans les galaxies spirales avec SpIOMM. https://corpus.ulaval.ca/jspui/handle/20.500.11794/27970. பார்த்த நாள்: 2022-02-08. 
  4. Bernier, A.-P.; Grandmont, F.; Rochon, J.-F.; Charlebois, M.; Drissen, L. (2006-06-29). "First results and current development of SpIOMM: an imaging Fourier transform spectrometer for astronomy". Ground-based and Airborne Instrumentation for Astronomy (International Society for Optics and Photonics) 6269: 626949. doi:10.1117/12.671410. https://www.spiedigitallibrary.org/conference-proceedings-of-spie/6269/626949/First-results-and-current-development-of-SpIOMM--an-imaging/10.1117/12.671410.short. 
  5. "Fonds Nature et technologies - An indigenous astrophysicist in Hawaii". www.frqnt.gouv.qc.ca (in கனடிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-10.
  6. "Accueil". laurie-rousseau-nepton-03.webself.net. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10.
  7. "Achievements". laurie-rousseau-nepton-03.webself.net. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.