இலவு நரேந்திரநாத்து
இலவு நரேந்திரநாத் (Lavu Narendranath) ஓர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் ஐதராபாத்திலுள்ள நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார்.[1]
இலவு நரேந்திரநாத் Lavu Narendranath | |
---|---|
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | எலும்பியல் மருத்துவர் |
விருதுகள் | பத்மசிறீ |
தொழில்
தொகுமருத்துவப் பாடத்தில் பட்டமும், முதுகலைப் பட்டமும் [2] பெற்றபின்னர் நரேந்திரநாத் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். 2013 ஆம் ஆண்டு ஆகத்து 31 வரை நிறுவனத்தின் துணைத் தலைவராக தனது மேலதிக பதவி நிறைவு பெறும் வரை அங்கு பணியாற்றினார்.[3] தொடர்ந்து இயக்குநராகப் பணியைத் தொடரும்படி நிறுவனம் இவரிடம் கேட்டுக் கொண்டது. இந்நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தோல்வி அடைந்ததால் இவர் தன் பணியை தொடர்ந்து வருகிறார்.[4] நரேந்திரநாத்தின் பதவிக்காலத்தில் நிறுவனம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.[5] போலியோ பாதிப்புக்குள்ளான நபர்கள் மற்றும் உறுப்புத் துண்டிக்கப்பட்டவர்களுக்கான மிகக் குறைந்த எடை கொண்ட செயற்கைக் கால்களை உருவாக்கும் திட்டத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.[4] இந்திய மருத்துவத்துறையில் நரேந்திரநாத் ஆற்றிய சீறிய பணிகளுக்காக இந்திய அரசு நான்காவது உயர் குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை 2005 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "L. Narendranath new Nims head". Deccan Chronicle. 2 September 2013. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ "Practo profile". Practo. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ "Government brings in a Padma Shri to get NIMS back on track". Indian Express. 1 September 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ 4.0 4.1 "Dr L Narendranath appointed director of NIMS, Hyderabad". Pharma Biz. 3 September 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ "Telangana Deputy CM Targets NIMS Director". Great Andhra. 20 January 2015. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.