இலாகோட்டா ஏரி
இலாகோட்டா ஏரி (Lakhota Lake) என்பது இந்திய மாநிலமான குசராத்து ஜாம்நகரின் மையத்தில் அமைந்துள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி.[1] இந்த ஏரி இலாகோட்டா தலாவ் அல்லது இரன்மால் ஏரி என்று பிரபலமாக அறியப்படுகிறது.[2] இலாகோட்டா கோட்டை இந்த ஏரியில் ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. இந்த ஏரி ஜாம்நகர் தொடருந்து நிலையத்திலிருந்து 5 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஜாம்நகர் நகரத்தின் மிகப்பெரிய நீர்நிலைகளில் ஒன்றாகும். மேலும் ஜாம்நகரில் பார்வையிட வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]
இலாகோட்டா ஏரி | |
---|---|
இலாகோட்டா ஏரி | |
அமைவிடம் | ஜாம்நகர், குசராத்து |
ஆள்கூறுகள் | 22°27′56″N 70°03′52″E / 22.4656°N 70.0645°E |
ஏரி வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | ஜாம்நகர் |
வரலாறு
தொகு18ஆம் நூற்றாண்டில் இலாகோட்டா கோட்டை மற்றும் இலாகோட்டா ஏரி இரண்டும் கிங் ஜாம் ரன்மால் என்பவரால் கட்டப்பட்டன.[2][4] இந்த ஏரி பொழுதுபோக்கு மையமாகவும் சுற்றுலாத் தலமாகவும் அறியப்படுகிறது.[5] இந்த ஏரி 75 பல்வேறு வகையான பறவைகள் உட்படப் பல அரிய விலங்குகளின் இருப்பிடமாகவும் உள்ளது.[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lakhota Lake · Government Colony, Jamnagar, Gujarat 361005". Lakhota Lake · Government Colony, Jamnagar, Gujarat 361005 (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
- ↑ 2.0 2.1 Pravase. "Lakhota Lake, Palace, Timing, Fees, History, Jamnagar| Pravase". pravase.co.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
- ↑ "Ranmal Lakhota Lake | District Jamnagar, Government of Gujarat | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
- ↑ 4.0 4.1 "Lakhota Lake Jamnagar | Lakhota Talav Jamnagar, History". Gosahin - Explore Unexplored Destinations (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
- ↑ "Places Details". www.mcjamnagar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.