இலாலாதேந்து பித்யாதர் மொகப்பத்ரா

இலாலாதேந்து பித்யாதர் மொகப்பத்ரா (Lalatendu Bidyadhar Mohapatra) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2] 1995, 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் பிரம்மகிரியில் போட்டியிட்டு இவர் ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

இலாலாதேந்து பித்யாதர் மொகப்பத்ரா
Lalatendu Bidyadhar Mohapatra
இலலதேந்து பித்யாதர் மொகப்பத்ராவின் உருவப்படம்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
பதவியில்
1995–2009
முன்னையவர்அசய்குமார் செனா
பின்னவர்சஞ்சய் குமார் தாசு பர்மா
தொகுதிபிரம்மகிரி சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1964-02-14)14 பெப்ரவரி 1964
இறப்பு6 நவம்பர் 2016(2016-11-06) (அகவை 52)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்உபசனா மொகப்பத்ரா
முன்னாள் கல்லூரிபக்சி இயகபந்து பித்யாதார் கல்லூரி
தொழில்அரசியல்வாதி

பித்யாதர் மொகப்பத்ரா பக்சி இயகபந்து பித்யாதார் கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை முடித்தார். 2004 முதல் 2009 ஆம் ஆண்டு ஒரிசா பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.[4]

இலாலாதேந்து பித்யாதர் மொகப்பத்ரா 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று மூளை பக்கவாதம் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாக இறந்தார். Lalatendu Bidyadhar Mohapatra died on 6 November 2016 due to brain stroke and multiple organ failure.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Lalatendu Bidyadhar Mohapatra MLA Profile". naveenpatnaik.com. Archived from the original on 24 June 2017.
  2. "Orissa 2009 Lalatendu Bidyadhar Mohapatra". myneta.info.
  3. "Bramhagiri (Orissa) Assembly Constituency Elections". elections.in.
  4. "Lack of a leader affects the state". The Telegraph. Kolkota. Archived from the original on 3 April 2014.
  5. "Odisha Congress party strongman Lulu Mohapatra is no more". 6 November 2016.