இலிசோசு
இலிசோஸ் ( Ilisos or Ilisus) என்பது கிரேக்கத்தின் ஏதென்சில் பாயும் ஒரு ஆறாகும். முதலில் கிஃபிசோசின் துணை ஆறாக இருந்த இது, இது பின்னர் கடலுக்கு செல்வதாக ஆனது. 2019 சூன் நிலவரப்படி ஆற்றை மீட்டெடுக்கும் திட்டங்கள் இருந்தாலும், இது இப்போது பெருமளவில் நிலத்தடிக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆறு அண்டை ஆறான கிஃபிசோசுடன் சேர்ந்து, 420 சதுர கிமீ நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. [1]
Ilisos | |
---|---|
நடு ஏதென்சில் உள்ள இலிசோஸ் ஆற்றுப் படுகைக்யில் கால்வாய் அமைக்கப்படாத ஒரு பகுதி | |
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | கிரேக்கம் |
பிராந்தியம் | அட்டிகா |
நகரம் | ஏதென்ஸ் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | எமெட்டஸ் மலை |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | ஃபலேரோன் விரிகுடா |
⁃ ஆள்கூறுகள் | 37°56′23″N 23°40′51″E / 37.9397°N 23.6808°E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
பண்டைய ஏதென்சு
தொகுபழங்காலத்தின் போது, ஏதென்சின் மதில் சுவர்களுக்கு வெளியே ஆறு ஓடிக்கொண்டிருந்தது: [2] பிளேட்டோ தன் கிரிடியாசில் இந்த ஆறு பண்டைய கிரேக்க மதில் சுவர்களின் எல்லைகளில் ஒன்றாக இருந்தது என்று எழுதினார். அதன் கரைகள்—தற்போது இல்டன் விடுதி மற்றும் தேசிய காட்சியகம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் பரபரப்பான சந்திப்பில்—புல் நிறைந்ததாகவும், பிளைட்டன் மரங்களால் நிழல் தரக்கூடிய பகுதியாகவும் இருந்தன, மேலும் அவை பழங்காலத்தில் அழகற்றதாகக் கருதப்பட்டன; அவை சாக்ரடீசுக்கு நடக்கவும், கற்பித்தலுக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக இருந்தன. ஒரு உள்ளூர் நாயகனான பங்க்ராடெஸ் கோயில் அங்கு அமைந்திருந்தது. அதன் பெயரே நவீன புறநகர்ப் பகுதியான பக்ராட்டி கொண்டுள்ளது. இலிசோஸ் ஒரு சிறு தெய்வமாகவும், பொசைடன் மற்றும் டிமிடரின் மகனாகவும் கருதப்பட்டார். மேலும் தற்போதைய பனாதினைகோ அரங்கத்துக்ககு அடுத்துள்ள ஆர்டிட்டோஸ் மலையில் உள்ள ஒரு கோயிலில் வணங்கப்பட்டார். இந்த பகுதி பழங்காலத்தில் சினோசார்சசு என்று பெயரிடப்பட்டது. மேலும் கல்லிர்ஹோக் நீரூற்று அங்கு அமைந்திருந்தது.
தற்கால போக்கு
தொகுஇந்த நீரோடை எமெட்டஸ் மலையின் மேற்கு சரிவுகளில் உற்பத்தி ஆகிறது. பல பருவகால சிற்றோடைகளின் சேர்க்கையால் உருவாகிறது. 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏதென்சு நகர்ப்புறம் விரிவடைந்ததால், ஆறு மாசுபாட்டுகள் நிறைந்ததாக மாறியது. பின்னர் படிப்படியாக மழைநீர் ஓடும் வடிகாலாக மாற்றப்பட்டது.
குறிப்புகள்
தொகு- ↑ "Preliminary Flood Risk Assessment" (in கிரேக்கம்). Ministry of Environment, Energy and Climate Change. p. 58. Archived from the original on 15 February 2020.
- ↑ "The Revenge of the River: One more collapse in Tavros parking on Sat (video)". Keep Talking Greece (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.