பொசைடன்

பொசைடன் (Poseidon) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் பன்னிரு ஒலிம்பியக் கடவுளர்களுள் ஒருவரும் கடல் கடவுளும் ஆவார். இவரது தேர்க்குதிரைகள் நிலத்தில் ஓடும்போது நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் பூமியை அதிரச் செய்பவர் என்றும் பொசைடன் அழைக்கப்படுகிறார்.[1][2].[3] இவர் வழக்கமாக சுருள் முடி மற்றும் தாடி கொண்ட முதியவராகக் காட்சியளிக்கிறார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைட்டன்களின் இரண்டாவது மகன் ஆவார்.இவர் இந்து மதத்தில் வருணனிற்கு இணையாவர்.

பொசைடன்
0036MAN Poseidon.jpg
ஏதென்சில் உள்ள தேசிய தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள பொசைடனின் சிலை
இடம்ஒலிம்பிய மலைச்சிகரம் அல்லது கடல்
துணைஅம்ஃபிடிரைட்
பெற்றோர்கள்குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரிஏடிசு, டிமிடர், எரா, எசுடியா மற்றும் சியுசு
குழந்தைகள்தீசியசு, டிரைடன், பாலிஃபியூமசு, பெலசு, எகேனார், நிலீயூசு, அட்லசு (பொசிடனின் மகன்)

பொசைடனின் வழிபாடுதொகு

பொசைடன் பல நகரங்களில் முக்கியமான கடவுளாக இருக்கிறார். ஏதென்சில் கடவுள் ஏதெனாவை அடுத்து இவரே முக்கியமானவர். கார்னித் மற்றும் மாக்னா கிரேசியாவில் உள்ள பல நகரங்களில் இவர் போலிசு நகரின் முக்கிய கடவுளாக இருக்கிறார்.

பொசைடன் பல தீவுகள் மற்றும் அமைதிக் கடல்களை உருவாக்குபவராக பார்க்கப்படுகிறார். இவரை யாராவது வழிபடாமல் புறக்கணித்தால் இவர் தன் சூலாயுதத்தின் மூலம் பூமியில் குத்தும் போது நிலநடுக்கம், மோசமான வானிலை மற்றும் கப்பல் கவிழ்தல் போன்ற விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கப்பலோட்டிகள் தங்களின் பாதுகாப்பான கடல் பயணத்திற்காக பொசைடனை வழிபடுவர்; சிலர் குதிரைகளை நீரில் மூழ்கச் செய்து அவருக்குப் பலி கொடுப்பதும் உண்டு.

மனைவி மற்றும் குழந்தைகள்தொகு

பொசிடானுக்கு பல இருபால் காதலர்கள் இருந்தனர். நீரியசு மற்றும் டோரிசு ஆகியோரின் மகளான பழங்கால கடல் கடவுளான அம்ஃபிட்ரிட் இவரது மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் டிரைடன் என்ற மகன் பிறந்தார்.

பொசைடன் ஒருநாள் தன் சகோதரி டிமிடர் மேல் காமம் கொண்டார். இதனால் டிமிடிர் பெண் குதிரை உருவம் எடுத்து தப்பி ஓடினார். ஆனால் பொசைடனும் ஆண் குதிரை வடிவம் எடுத்து டிமிடரைத் துரத்திச் சென்று இறுதியாக அவரை கற்பழித்தார். இதன் மூலம் ஏரியசு என்ற பேசும் ஆண் குதிரை பிறந்தது.

மெடூசாவின் மேல் காமம் கொண்ட பொசைடன் அவரை ஏதெனாவின் கோவிலின் வாசலில் வைத்து உறவாடினார். இதனால் கோபமடைந்த ஏதெனா மெடூசாவை பேயாக மாறுமாறு சபித்தார். மேலும் மெடூசாவின் முகத்தை பார்ப்பவர்கள் கல்லாக மாறக்கடவார்கள் என்றும் சபித்தார். பிறகு மாவீரன் பெரிசியூசு தந்திரமாக தன் வாளைக் கொண்டு மெடூசாவின் தலையை வெட்டினார். அப்போது மெடூசாவின் கழுத்தில் இருந்து பெகாசசு மற்றும் சைராசோர் என்று இரு மகன்கள் பிறந்தனர். இவர்கள் இருவரும் பொசைடனின் பிள்ளைகள் ஆவர்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொசைடன்&oldid=3222900" இருந்து மீள்விக்கப்பட்டது