இலித்தியம் ஓல்மியம் புளோரைடு

வேதிச் சேர்மம்

இலித்தியம் ஓல்மியம் புளோரைடு (Lithium holmium fluoride) என்பது LiHoF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு மும்மை உப்பாக வகைப்படுத்தப்படும் இது 1.53 கெல்வினுக்கு குறைவான வெப்பநிலையில், ஐசிங் என்பவரின் மாதிரியால் விவரிக்கப்பட்ட பெரோ காந்தப் பண்புடன் காணப்படுகிறது. ஆனால் தொடர்பு குணகங்கள் மீப்பரிமாற்றம் மூலம் எழுகின்றன.[1][2] அந்த வெப்பநிலைக்கு மேல், இது பாரா காந்தப் பண்பை பெறுகிறது. 0 கெல்வின் வெப்பநிலையில் கூட LiHoF4 ஒரு குவாண்டம் கட்ட மாற்றத்தை வெளிப்படுத்தி வெளிப்புற காந்தப்புலத்துடன் இணைகிறது.[3]

இலித்தியம் ஓல்மியம் புளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/4FH.Ho.Li/h4*1H;;/q;;;;+3;+1/p-4
    Key: LBURCHZQDITKAP-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Li+].[Ho+3].[F-].[F-].[F-].[F-]
பண்புகள்
F4HoLi
வாய்ப்பாட்டு எடை 247.86 g·mol−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இட்ரியம் இலித்தியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Cooke, A. H.; Jones, D. A.; Silva, J. F. A.; Wells, M. R. (8 August 1975). "Ferromagnetism in lithium holmium fluoride—LiHoF4: I. Magnetic measurements". J. Phys.. C: Solid State Phys. (Great Britain) 8: 4083–4088. doi:10.1088/0022-3719/8/23/021. https://iopscience.iop.org/article/10.1088/0022-3719/8/23/021/pdf. 
  2. Nikkel, James Algot (August 2003). Phonon studies of LiYxHoxF4 compounds at low temperatures (PhD thesis). Kent State – via ProQuest.
  3. Sachdev, Subir (April 1999). "Quantum phase transitions". Phys. World 12 (4): 33. doi:10.1088/2058-7058/12/4/23. https://iopscience.iop.org/article/10.1088/2058-7058/12/4/23/pdf. 

மேலும் படிக்க தொகு

  • Twengström, M.; Bovo, L.; Petrenko, O. A.; Bramwell, S. T.; Henelius, P. (19 October 2020). "LiHoF 4 : Cuboidal demagnetizing factor in an Ising ferromagnet". Physical Review B 102 (14): 144426. doi:10.1103/PhysRevB.102.144426.